Advertisment

Election Results 2019: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்! உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில்

Election result in Ietamil: காலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகள் லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
election result 2019 tamilnadu lok sabha election

election result 2019 tamilnadu lok sabha election

Election Result 2019 Live in IETAMIL: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (மே.23) வெளியாகிறது. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கவனமும் இத்தேர்தலின் முடிவை எதிர்நோக்கியே உள்ளது. இன்னார் தோற்க வேண்டும் என்றோ, இன்னார் ஜெயிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலோ கிடையாது இந்த ஆர்வம். இணைய புரட்சி உச்சக் கட்டத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில், மக்கள் பொழுதுபோக்கிற்கு எவ்வளவு கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை செய்திகளுக்கும் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையுடன், பாரத நாடு எதிர்கொள்ளும் முதல் மக்களவை தேர்தல் இதுவேயாகும்.

Advertisment

மேலும் படிக்க - வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி: தேர்தல் ஆணையர் விளக்கம்

ஆகையால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலையெழுத்தை தீர்மானிக்கவிருக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலின் முடிவுகளை உங்களுக்காக ஐஇ தமிழ் பிரத்யேகமாக வழங்கவிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வெளிவரும் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் செய்திகளை நேரடியாக உடனுக்குடன் உங்களுக்கு அளிக்க உள்ளது.

மேலும் படிக்க - Lok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்! ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

லைவ் அப்டேட்ஸ் மட்டுமல்லாது, ஒவ்வொரு தொகுதி குறித்த முழு அலசலையும் ஐஇ தமிழ் உங்களுக்கு வழங்கவிருக்கிறது.

நாளை காலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து லைவ் செய்திகளையும் உடனுக்குடன் நீங்கள் ஐஇ தமிழ் தளத்தில் காணலாம்.

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment