Advertisment

Lok Sabha Election 2019 Result Live Streaming: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்களவை தேர்தல் முடிவுகள்! ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

When, Where to Watch Lok Sabha Election Result 2019: மக்களவை தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் உடனுக்குடன் பார்ப்பது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Election 2019 Live Streaming, Election 2019 Result Online Streaming

Lok Sabha Election 2019 Live Streaming, Election 2019 Result Online Streaming

"Leadership is not about the next election, it's about the next generation"

Advertisment

Lok Sabha Election 2019 Result Live Telecast Online: இந்திய திருநாட்டில் இப்படிப்பட்ட தலைமை அமைய வேண்டும் என்பதே நமது ஒவ்வொருவரின் அவா. அதை நோக்கியே நாளை மே.23ம் தேதியை ஆவலோடு நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆம்! 17வது மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் குரல் நாளை ஒலிக்கப் போகிறது. அவர்களின் மனசாட்சி நாளை வெளிப்படையாகப் போகிறது.

Lok Sabha Election 2019 Live Streaming, Election 2019 Result Online Streaming

மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலா 533 இடங்களில் களம் கண்டுள்ளன. மெகா கூட்டணி 249 இடங்களிலும், மற்றவர்கள் 245 இடங்களிலும் போட்டியிட்டிருக்கின்றனர்.

இந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது! ஏன் தெரியுமா?

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகளான பாஜகவுடன் அதிமுகவும், காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்து களம் கண்டிருக்கின்றன. தவிர, 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலும் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த ரிசல்ட்டும் நாளை வெளியாகிறது.

மேலும் படிக்க - வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு : மனு தள்ளுபடி

இருப்பினும், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சில சந்தேகங்களை எழுப்பி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தன. அதாவது, ஓட்டு எண்ணும்போது முதலில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும். அதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் குறிப்பிட்ட அந்த சட்டமன்ற தொகுதியில் பதிவான அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

Lok Sabha Election 2019 Live Streaming, Election 2019 Result Online Streaming

ஆனால், வாக்கு எண்ணும் முறையை மாற்றக்கோரிய 22 எதிர்க்கட்சிகளின் மனுவை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது. ஸோ, வழக்கமான வாக்கு எண்ணும் முறை தான் மீண்டும் என்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணும் முறை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், "காலை எட்டு மணிக்கு முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். அதனையடுத்து 30 நிமிடங்கள் கழித்து வாக்கு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

மேலும் படிக்க - 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்... முக்கியத்துவம் பெரும் தொகுதிகள் எவை?

தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவுக்கு காத்திராமல் மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை முடித்த பின்னர் இறுதியாக ஒப்புகை வாக்குச் சீட்டு எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூர் தனி தொகுதியில் 34 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்" என்று அவர் அறிவித்துள்ளார்.

https://tamil.indianexpress.com/ மூலம் ஆன்லைனில் நீங்கள் உடனுக்குடன் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தவிர, https://www.facebook.com/IETamil/ என்ற ஐஇதமிழின் பேஸ்புக் பக்கத்திலும், https://twitter.com/IeTamil என்ற ஐஇ தமிழின் ட்விட்டர் பக்கத்திலும் தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்டுகளையும், முக்கியச் செய்திகளையும் காணலாம்.

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment