Election Results 2019 key constituencies, Vote counting date and time : ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரை இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், 19ம் தேதி மாலை வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள், பாஜகவின் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு ஆதரவாக வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளில் இருந்து உண்மையான தேர்தல் முடிவுகள் எவ்வளவோ வேறுபட்டிருக்கின்றன.
இந்த வருடம் 8000 வேட்பாளர்கள் போட்டியிட 542 லோக் சபா தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. 7 கட்ட வாக்குப்பதிவுகளில் சராசியாக 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 கோடி மக்கள் வாக்குகளிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அதனாலோ என்னவோ தேர்தல் முடிவுகள் அறிவிப்பு என்பது தேர்தல் ஆணையம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலக இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கைகள் ஆரம்பமாகும் நேரம்
காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைகள் ஆரம்பமாகும். தேர்தல் முடிவுகளும் நாளைக்குள்ளே அறிவிக்கப்பட்டுவிடும். பெரும்பான்மை பெறும் கட்சிகள் தொடர்பான அறிவிப்புகள் பிற்பகலில் இருந்து வெளியாகும். இறுதி செய்யப்பட்ட தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி நள்ளிரவோ, 24ம் தேதி அதிகாலையிலோ அறிவிக்கப்படும்.
Election Results 2019 key constituencies
வாரணாசி : பாஜக சார்பில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் சார்பில் இருந்து அஜய் ராயும் போட்டியிட்டனர்
அமேதி : உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் போட்டியிட்டுள்ளனர்
ரேபரேலி : உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியும், பாஜகவில் இருந்து தினேஷ் ப்ரதாப் சிங்கும் போட்டியிட்டுள்ளனர்.
லக்னோ : பாஜக சார்பில் ராஜ்நாத் சிங், சமாஜ்வாடியில் இருந்து பூனம் சின்ஹா, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆச்சர்யா ப்ரமோத் கிருஷ்ணம் போட்டி
போபால் : காங்கிரஸ் சார்பில் திக் விஜயசிங் மற்றும் பாஜக ச்சார்பில் சாத்வி ப்ரக்யா தாக்கூர் போட்டி
குர்தஸ்பூர் : பாஜக சார்பில் சன்னி தியோல் காங்கிரஸ் சார்பில் சுனில் ஜக்கார் (பஞ்சாப்)
அமிர்தசரஸ் – பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் இந்த தொகுதியில் பாஜக சார்பில் ஹர்தீப் சிங் பூரி மற்றும் குர்ஜீத் சிங் ஔஜ்லா காங்கிரஸ் சார்பிலும் போட்டியிடுகின்றனர்
பிஹாரில் இருக்கும் பெகுசராய் தொகுதியில் கன்ஹையா குமார் சிபிஐ சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கிரிராஜ் சிங் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தன்வீர் ஹஸ்ஸன் போட்டி
வயநாடு : கேரளாவில் அமைந்திருக்கும் இந்த தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். சி.பி.ஐ. சார்பில் பி.பி.சுனீர் மற்றும் பாரத் தர்ம தன சேனா கட்சி சார்பில் துஷார் வெல்லப்பள்ளி போட்டியிடுகிறார்
அசம்கர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவை எதிர்த்து உ.பி.யில் போட்டியிடுகிறார்.
ஹரியானாவில் இருக்கும் ஹிசார் தொகுதியில் ஜெ.ஜெ.பி (ஜனநாயக ஜனதா பார்ட்டி) கட்சி சார்பில் துஷ்யந்த் சௌதலா, காங்கிரஸ் சார்பில் பவ்யா பிஷ்னோய், பாஜக சார்பில் ப்ரிஜேந்திர சிங் போட்டியிடுகிறார்கள்.
ரோஹ்தக் : ஹரியானாவில் இருக்கும் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தீபேந்தர் சிங் ஹூடா, பாஜக சார்பில் ரமேஷ் சந்தர் கௌஷிக், ஜனநாயக ஜனதா பார்ட்டியில் இருந்து திக்விஜய் சௌதலா, மற்றும் ஐ.என்.எல்.டி சார்பில் சுரேந்தர் சிக்கரா போன்றோர் போட்டி
மெய்ன்புரி : உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் இந்த தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் முலாயம் சிங் யாதவ் மற்றும் பாஜக சார்பில் ப்ரேம் சிங் சாக்கியா போட்டி
அசன்சோல் – பாஜகவில் இருந்து பாபுல் சுப்ரியோ மற்றும் திரிணாமுல் சார்பில் மூன் மூன் சென் போட்டி.
கேந்திரப்பாரா : ஒடிசாவில் இருக்கும் இந்த தொகுதியில் பாஜக சார்பில் பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் சார்பில் தரணிதர் நாயக் போட்டி