Advertisment

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் அரசியல் பதிவுகளுக்கு விசாரணையா ? - மறுப்பு தெரிவித்த ஃபேஸ்புக்

பேஸ்புக்கில் பதிவிடும் நபரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பேஸ்புக் நிர்வாகம் ஈடுபடவில்லை - பேஸ்புக்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak Facebook Microsoft cancel major events

Coronavirus outbreak Facebook Microsoft cancel major events

Facebook Aadhaar Verification Issue : பேஸ்புக்கில் அரசியல் பதிவு இடவிரும்பும் பயனாளர்கள், தன்னை தேடிவரும் பேஸ்புக் பிரதிநிதியிடம் ஆதார் குறித்த விபரங்களை காட்ட தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இந்தியாவில், வரும் 11ம் தேதிமுதல் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகமாக பரவ சமூக வலைதளங்கள் முக்கிய காரணியாக உள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு, பேஸ்புக், வாட்சப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு வழிமுறைகளை வகுத்து அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

டில்லியை சேர்ந்த பேஸ்புக் பயனாளர் ஒருவர் அரசியல் பதிவு இட்டுள்ளார். சிறிதுநேரத்தில், பேஸ்புக் பிரதிநிதி என்று சொல்லி ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து ஆதார் உள்ளிட்ட விபரங்கைள சரிபார்த்தபின், இந்த பதிவை எழுதியது நீங்கள் தானா என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அந்த பேஸ்புக் பயனாளர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக, போலீசார் என்னிடம் விசாரிப்பது போன்று இந்நிகழ்வு இருந்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  என்னுடைய பதிவை, அனுமதியில்லாமல் ஒருவர் கண்காணிக்கிறாரென்றால், இங்கு தனிமனித சுதந்திரம் எங்கு உள்ளது ;  இதுவும் மத்திய அரசின் கட்டளைப்படி தான் நடக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இந்தியாவின் முன்னணி சைபர்கிரைம் சட்ட வல்லுனரும் மற்றும் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞருமான பவன் துக்கல் கூறியதாவது, இந்த நிகழ்வு உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடும் விதிமீறல் நிகழ்ந்துள்ளது. தனிநபர் சுதந்திரத்தில், தலையிடுவது கண்டிக்கத்தக்கது.  இது தனிநபர் சுதந்திரத்தில் அத்துமீறிய படையெடுப்பு என்றே கூறவேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளை மத்திய அரசு சட்டவிதிமுறைகளை கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, தேவையில்லாத பதிவுகள் இருந்தால், பேஸ்புக் நிர்வாகம், அந்த பதிவு, பக்கத்தை, பதிவிட்ட குருப்பை முன்பிருந்ததது போல் உடனடியாக நீக்கியிருக்கலாம். பேஸ்புக்கில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக, அந்த விளம்பரதாரர்களின் வீடுகளுக்கு சென்று பேஸ்புக் இதுபோன்று கள ஆய்வுகள் நடத்துமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Facebook Aadhaar Verification Issue - மறுப்பு தெரிவித்த பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் மறுப்பு : இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை, பேஸ்புக் மறுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் தொடர்பான விளம்பரங்கள் பெறுவதிலும் மற்றும் அதை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் மட்டும் பேஸ்புக் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறதே தவிர, பேஸ்புக்கில் பதிவிடும் நபரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பேஸ்புக் நிர்வாகம் ஈடுபடவில்லை என்று பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் மூலம் வரும் போலி செய்திகளை கண்டறிவது எப்படி? புதிய டெக்னாலஜி அறிமுகம்!

Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment