Advertisment

How to Vote Using EVM, VVPAT: இன்று முதன்முறையாக ஓட்டு போட இருப்பவர்களுக்கு இதோ முக்கியமான தகவல்!

How to Cast Your Vote using EVM and VVPAT: முதன் முறையாக ஓட்டு போடுபவர்கள் உங்கள் கடமையை ஆற்ற மறந்து விடாதீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
First time voters, Electors verification program

First time voters

How to Use EVM, VVPAT Machine to Cast Vote: வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் தேர்தலை சந்திக்க தயார் ஆகிவிட்டது. ஜனநாயக கடமையாக பார்க்கப்படும் தேர்தலில் ஓட்டு போடுவதை ஒவ்வொரு வாக்காளர்களும் தவறமல் செய்ய வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் முதன் முறையாக ஓட்டு போடுபவர்கள் உங்கள் கடமையை ஆற்ற மறந்து விடாதீர்கள்.

Advertisment

தேர்தலில் ஓட்டு போட்டு உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது உங்களின் தலையாய கடமை.இந்திய ஜனநாயகத்தை நிலை நாட்ட தேர்தல் தேவை என்பதால் அதனை நடத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் நாட்டின் உயர்ந்த அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - Tamil Nadu Lok sabha Election 2019 Polling Live: தமிழக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு லைவ் அப்டேட்ஸ்

தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு ஓட்டு போட பல்வேறு வசதிகளை செயல்படுத்தி தருவதில் தொடங்கி, முதன் முறைய வாக்காளர்க்ளுக்கு விழிப்புண்ர்வு ஏற்படுவதை வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஏப்ரம் 18 ஆம் தேதி வாக்குசாவடிக்கு சென்று முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் பதற்றம் மற்றும் குழப்பமின்றி வாக்களிக்க சில உபயோகமான தகவல்கள் இதோ உங்களுக்காக..

முன்பெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதில் தொடங்கி அதற்கான முறையான ஆவணங்கள் சமர்பிப்பது வரை அனைத்து வேலைக்கும் அரசு தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த பிரச்சனை இல்லை. எல்லாமே ஆன்லைன் வசதி தான்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் இணையதளமான (//www.nvsp.in/) ஃபார்ம் 6 யை பூர்த்தி செய்து சென்று வாக்காளர் அட்டையை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாக்குசாவடிக்கு சென்ற பின்பு செய்ய வேண்டியவை:

1. வாக்குசாவடியில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளிடம் உங்கள் வாக்காளர் பெயர் பட்டியலை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருந்தால் உங்கள் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் அடையாள அட்டை அல்லது மற்ற ஏதாவது ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

2. பின்பு அதிகாரிகள் உங்கள் கை விரலில் மை வைப்பார்கள். பிறகு நீங்கள் அவர்களிடம் உங்கள் வாக்கு சீட்டை காண்பிக்க வேண்டும். அவர்கள் உறுதி செய்தவுடன் வருகை பதிவு ஒன்றில் உங்களின் கையெழுத்தை பதிவு செய்ய வேண்டும்.

3. மூன்றாவது அமர்ந்திருக்கும் அதிகாரி உங்கள் கை விரல் மற்றும் வாக்கு சீட்டு சரியாக உள்ளதா என்று சோதித்து பார்ப்பார். பின்பு நீங்கள் வாக்களிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு செல்லலாம்.

4. இப்போது இயந்திரத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள் அவர்களின் சின்னத்துடன் இடம்பெற்றிருக்கும். இதில் நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் கட்சிக்கு நேராக இடம் பெற்றிருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். அப்போது பீப் என்ற ஒலி கேட்கும். அப்படியென்றால் உங்கள் வாக்கு பதிவு ஆகிவிட்டது என்று அர்த்தம்.

ஓட்டு போட வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலைய விடுங்க இதைப் படிங்க!

5. நீங்கள் அழுத்திய பட்டனுக்கு நேராக கட்சியின் சின்னத்தில் ஒளி தோன்றும். அது நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பிய கட்சி தானா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

6. நீங்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் வாக்களிக்கும் இயந்திரத்தில் கடைசி வரிசையில் இடம் பெற்றிருக்கும் நோட்டாவை தேர்வு செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு http://ecisveep.nic.in/ இணையத்தில் சென்று தெரிந்துக் கொள்ளவும்.

Election Commission General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment