லோக் சபா தேர்தல் 2019 : நாட்டு மக்களுக்கு மோடியும் ராகுலும் கூறிய செய்தி என்ன?

General Election 2019 Rahul Gandhi Tweet : இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், உத்திரப் பிரதேசம் என நாட்டின் மிக முக்கியம் வாய்ந்த பல்வேறு மாநில மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். General Election 2019 Rahul Gandhi Tweet இந்நிலையில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு தங்களின் செய்திகளையும், ஜனநாயக கடமையை நிறைவேற்றும் […]

Lok Sabha Election 2019 Result Social Reactions, Lok Sabha Election 2019 Result

General Election 2019 Rahul Gandhi Tweet : இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், உத்திரப் பிரதேசம் என நாட்டின் மிக முக்கியம் வாய்ந்த பல்வேறு மாநில மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

General Election 2019 Rahul Gandhi Tweet

இந்நிலையில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு தங்களின் செய்திகளையும், ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வண்ணமும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.  இன்று நடைபெறும் தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான கருத்தினை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தியில் நியாய் என்றால், நியாயம், தீர்ப்பு என்று பொருள். இன்று அவருடைய ட்விட்டரில் “நியாயத்திற்காக நீங்கள் மறக்காமல் வாக்களிக்க வேண்டும். நியாயம் நமது வேலையில்லா இளைஞர்களுக்கு வேண்டும்.

அல்லல்படும் நமது விவசாயிகளுக்காக, பணமதிப்பிழக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நடத்துபவர்களுக்காக, சாதி மற்றும் மதம் காரணமாக பல்வேறு இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தவர்களுக்கான நியாயம் வேண்டும்” என்று பொருள் தரும் வகையில் டீவிட் செய்துள்ளார்.

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

நரேந்திர மோடி ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,  அன்பான இந்திய குடிமக்களே, இன்று இரண்டாம்கட்ட லோக் சபா தேர்தல் நடைபெறுகிறாது. இன்று வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களும் நம்முடைய ஜனநாயகத்தை பலபடுத்துகின்றீர்கள். நிறைய இளைஞர்கள் இன்று அதிகமாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த டீவிட்டில் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: General election 2019 rahul gandhi and modi asks citizen to vote

Next Story
Tamil Nadu By Election 2019: 18 தொகுதிகளில் சராசரியாக 71.62 சதவிகிதம் வாக்குப் பதிவு, ஹைலைட் நிகழ்வுகள் இங்கே!By Election 2019 Tamil Nadu Live
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express