Advertisment

Voter Registration, Form 6: முதன் முறையாக ஓட்டு போட இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணும்!

How to Register for Voting in India : வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்து விடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
First time voters, Electors verification program

First time voters

Registration for Vote in India: நாடு முழுவதும் 9-வது தேசிய வாக்காளர் தினம் இன்று (25.1.19) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பொதுமக்கள் வாக்குரிமை குறித்தும் அதுத் தொடர்பான சில தகவல்களை தெரிந்துக் கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சில வழிமுறைகளை பகிர்ந்துள்ளது.

Advertisment

நாட்டில் தேர்தல்களை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜனவரி 25-ம்தேதி தொடங்கப்பட்டது. இந்த நாளைத்தான் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறோம். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா இருந்து வருகிறது. இங்குள்ள 120 கோடிப்பேர் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுதான் இதற்கான காரணம்.

மேலும் படிக்க - Tamil Nadu Lok sabha Election 2019 Polling Live: தமிழக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு லைவ்

இந்த ஜனநாயகத்தை நிலை நாட்ட தேர்தல் தேவை என்பதால் அதனை நடத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் நாட்டின் உயர்ந்த அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2019 தேர்தல் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. அரசியல் கட்சிகள் அதற்கான பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல் அல்லது திருத்தம் மேற்கொள்ளுதல்.

முதன்முறையாக ஓட்டு போட தயாராகி இருக்கும் வாக்காளர்கள் அதற்கான முறையான ஆவணங்களை சமர்பித்த என பிஸியாக இருப்பீர்கள். உங்களுக்காவே இந்த சிறப்பு பகிர்வு. இன்றைய நவீன உலகில் எல்லாமே ஆன்லைன் ஆக மாறிவிட்டது. நேரில் சென்று அலையும் எந்த பிரச்சனையும் இப்போது இல்லை.

தெளிவான ஆவணங்கள் உடன் ஆன்லைன் பதிவு செய்தால் போதும். வாக்காளர் அடையாள அட்டையில் இருந்து அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும். எப்படி என்று கேட்பவர்கள் இதை படியுங்கள். "ஓட்டுரிமை" சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனும் தனக்கான "வாக்காளர் அடையாள அட்டை" என்ற அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டியது முக்கியமானது.

Registration for Vote in India: ஃபார்ம் 6 !

தேர்தல் ஆணையம் நடத்தும் முகாமில் பார்ம் 6 மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளமான (https://www.nvsp.in/) ஃபார்ம் 6 யை பூர்த்தி செய்து சென்று வாக்காளர் அட்டையை பெற முடியும்.

இந்தியாவின் குடிமகனான நீங்கள், இந்தியாவிற்கு வெளியில் வசித்து வந்தால் பார்ம் 6A வை பூர்த்தி செய்து அடையாள அட்டையை பெறலாம். உங்களது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தால் ஃபார்ம் 8ஐ பூர்த்தி செய்து திருத்தம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப தாரரின் தகவல்கள், பிறந்த இடம் சார்ந்த தகவல்கள், இருப்பிடம் சார்ந்த தகவல்கள், குடும்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போரின் தகவல்கள் பதிவு செய்து, சான்றிதழ் பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணபித்த பின்னர், 2 அல்லது 3 நாட்களுக்குள் அரசு அலுவலர்கள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரடியாக வந்து நீங்கள் அளித்த தகவல்களை சரிபார்ப்பர், சரிபார்த்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் உங்களது வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்து விடும்.

வாக்காளர் அடையாள அட்டை http://www.elections.tn.gov.in/Web/forms/Form6Tamil_old.pdf

Election Commission General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment