West Bengal Election 2021 : சி.பி.எம் கட்சியின் நிறத்தில் சுடிதார் அணிந்து, கைகள் வணங்கிய நிலையிலேயே இருக்க கிராமத்திற்கு 100 கணக்கான சி.பி.எம். மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி தொண்டர்களுடன் வலம் வருகிறார் நந்திகிராமின் சி.பி.எம். வேட்பாளர் மீனாட்சி முகர்ஜி. மற்ற கட்சிகளை போன்று இசையும், ஆர்பாட்டமும் இல்லை. மீனாட்சி சொல்லும் ஒரே சொற்றொடர், சி.பி.எம். கட்சியின் நந்திகிராம் வேட்பாளர் நான் என்பது தான்.
மமதா பானர்ஜியும் அவருக்கு நம்பிக்கையாளராக இருந்து எதிரியாக மாறிய சுவேந்து அதிகாரி ஆகியோர் போட்டியிடும் களம். எளிமையான தோற்றத்தின் காரணமாக மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். கிராமம் விட்டு கிராமம் பிரச்சாரத்திற்கு செல்லும் போது 37 வயது பெண் ஒருவர் பெரிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக போட்டியிடுகிறார் என்று மக்கள் பார்க்க வருகின்றனர்.
தௌத்பூர் பகுதியில் உள்ள நய்நன் தொகுதியில் முகர்ஜி மூத்தவர்களுக்கு வணக்கம் வைக்கிறார். பெண்களை கட்டிப் பிடித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதாகவும் கூறி வாக்கு சேகரிக்கிறார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அதற்காக தான் போட்டியிடுகிறோம் என்றார் அவர்.
மேலும் படிக்க : இரட்டை இலையைக் கூறி தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் அண்ணாமலை
மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த 78 வயதுமிக்க ரஷித் கான் அவருடைய கையை பிடித்துக் கொண்டு அழத் துவங்கினார். நீ எங்களுக்கு புத்துணர்வை அளித்துள்ளாய். இம்முறை நாங்கள் உனக்கே வாக்களிப்போம். கவலைப்படாதே. போராடு என்று கூறினார்.
மிகவும் முக்கியமான நந்திகிராம் தொகுதியில் மக்களை பிளவுப்படுத்தும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. பாஜக இந்து மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களை குறிவைக்க, திரிணாமுல் காங்கிரஸ் இஸ்லாமியர்களின் பெரும்பானை அதிகமாக இருக்கும் நந்திகிராம் 1-ஐ நம்பியுள்ளனர். ஆனால் தற்போது இந்திய மதசார்பற்ற கூட்டணி காரணி புதிதாக உள்ளது.
முகர்ஜியை போராட்டக்காரர் என்று கூறும் கான், நய்னானின் அனைத்து குடும்பத்தினரும் சி.பி.எம். ஆதரவாளர்கள் தான். நாங்கள் யாரையும் காயப்படுத்த மாட்டோம். ஆனால் 2011ம் ஆண்டில் இருந்து எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. திரிணாமுலில் இருக்கும் அடியாட்கள் எங்களின் அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டு, உங்களின் வாக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். கடந்த ஆண்டு நான் வாக்களிக்க சென்றேன். என்னுடைய வயதையும் கூட பொருட்படுத்தாமல் அவர்கள் என்னை தாக்கினார்கள் என்று வருத்தம் கொண்டார்.
முகர்ஜி தேர்வு செய்யப்பட்டால் அவர் ஊழல்வாதியாகவோ, திருடராகவோ பெயர் எடுக்க மாட்டார் என்பதை திரும்பத் திரும்ப கூறினார். அவருக்கு முன்னாள் இருக்கும் சவால் என்னவென்றால், அந்த பகுதிகள் முழுமையாக பாஜக மற்றும் டி.எம்.சி. கொடிகளால் நிரம்பியுள்ளது. சி.பி.எம். கட்சி இளைஞர் அணி உறுப்பினர் ஜியாவூர் ரஹ்மான், இப்படியாக யாரும் நினைக்கமாட்டார்கள். நந்திகிராமின் அனைத்து பகுதிகளிலும் எங்களுக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள். இதனை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கமாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாஜம மற்றும் டி.எம்.சி.யிடம் நிறைய பணம் இருக்கிறது. அதனால் தான் அவர்களின் கொடிகள் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் அவர்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
பாஜகவுடன் இணைந்து சி.பி.எம் கட்சியினரும் பாதுகாப்பு கூறியுள்ளனர். அக்கட்சி மிகவும் பலம் கொண்டதாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் ஐ.எஸ்.எஃப். சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவார்கள் என்று கூறினார் அவர்.
பாஜக மற்றும் டி.எம்.சி. முகர்ஜி பெரும் வாக்குகள் குறித்து பேசி வருகின்றனர். மமதாவுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டி.எம்.சி. தலைவர் ஒருவர், நந்திகிராம் இரண்டில் சி.பி.எம்–ற்கு அதிக ஆதரவு உள்ளது. எனவே அங்கு நிச்சயமாக அதிக வாக்குகளை பெற்று பாஜகவிற்கு பின்னடைவை தருவார் மீனாட்சி என்றார். பாஜக தலைவர், முகர்ஜி ஐ.எஸ்.எஃப். ஆதரவாளர்களுடன் வலம் வருகிறார். எனவே இந்து மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறினார். இது போன்ற விசயத்தில் எல்லாம் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று கூறிய மீனாட்சி மக்களுக்கு உணவும் வாழ்வாதரமும் தான் முக்கியம் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil