Advertisment

இரட்டை இலையைக் கூறி தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் அண்ணாமலை

அவருடைய பணி, சவாலனாது, ஆனாலும் எளிதானது. அங்கிருக்கும் இரட்டை இலை மற்றும் உதய சூரியனை மட்டுமே தெரிந்த மக்களிடம் பாஜகவின் தாமரை சின்னத்தை அறிமுகம் செய்வது தான்.

author-image
WebDesk
New Update
In seat tied to cash row, ex-IPS officer steers Lotus via Two Leaves

 Manoj C G  

Advertisment

In seat tied to cash row, ex-IPS officer steers Lotus via Two Leaves : உள்ளூர் ஆட்களாக இல்லாத களப்பணியாளர்கள் கார் மற்றும் எஸ்.யூ.வியில் வலம் வர, அண்ணாமலை, வறண்ட, கரடான பகுதிகள் நிறைந்த பிற்படுத்தப்பட்ட தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த தொகுதி அதிமுக அல்லது திமுகவிற்கே என்றும் வாக்களித்து வந்தது. முன்னாள் காவல்துறை அதிகாரியின் இந்த பிரச்சாரம் கொஞ்சம் பிரம்மாண்டமானது தான். வீடியோ கலைஞர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பதிவு செய்து வருகின்றனர். அவருக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க அங்கே ஒரு தொழில்நுட்ப குழுவும் இயங்கி வருகிறது. அவருடைய காரில், அவரின் பிரச்சாரங்களுக்கு இடையேயான பொழுதில் வல்லுநர்களிடம் இருந்து உள்ளீடுகளை வாங்கிக் கொள்கிறார்.

அவருடைய பணி, சவாலனாது, ஆனாலும் எளிதானது. அங்கிருக்கும் இரட்டை இலை மற்றும் உதய சூரியனை மட்டுமே தெரிந்த மக்களிடம் பாஜகவின் தாமரை சின்னத்தை அறிமுகம் செய்வது தான். 2019ம் ஆண்டு இந்த ஐ.பி.எஸ். அதிகாரி பணியில் இருந்து விலகி பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்தார். அவர் தற்போது அக்கட்சியின் மாநில துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். பாஜக தொண்டர்கள் பற்றாக்குறை உள்ள இந்த தொகுதியில் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், தன்னார்வலர்கள் என்று 1200 முதல் 1500 நபர்களை கொண்ட அண்ணாமலையை அக்கட்சி சந்தித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இணைந்து இருக்கும் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் அரவக்குறிச்சியும் ஒன்று. தமிழகத்தின் பெரிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் அரவக்குறிச்சி பல்வேறு தவறான காரணங்களுக்காக செய்திகளில் பேசப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே தேர்தல் ஆணையம், அளவுக்கதிகமான பணப் பட்டுவாடா மற்றும் பரிசுகளை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ததற்காக 2016ஆம் ஆண்டு தஞ்சாவூர் உடன் சேர்த்து இந்த தொகுதியின் தேர்தல் அறிவிப்பையும் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் உள்ளூர் அதிமுக பிரமுகர் மற்றும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். பிறகு அவர் டிடிவி தினகரனுடன் இணைந்தார். 2017ம் ஆண்டில் அவ்வாறு செய்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களில் அவரும் ஒருவர். அதன் பின்னர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அரவக்குறிச்சியில் அவருக்கு முழு கட்டுப்பாடும் இருக்கின்ற போதும் இம்முறை செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். திமுக மோஞ்சனூர் பி ஆர் இளங்கோவை இந்த தொகுதியில் களம் இறக்கியுள்ளது.

மேலும் படிக்க : தமிழக தேர்தலைக் காட்டிலும் மே.வ. தேர்தல் ஏன் முக்கியமானது? பிரசாந்த் கிஷோருடன் ஒரு நேர்காணல்

அரவக்குறிச்சியில் இருந்து வந்ததால் பாஜகவின் தேர்வாக அண்ணாமலை இருக்கிறார். இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாக இருக்கும் இந்த பகுதியில் போட்டியிடுவது குறித்து பேசிய அவர், வெளியில் இருந்து பார்க்கும் போது இது மிகவும் சவாலானதாக இருக்கும். 16.5% சிறுபான்மை மக்களின் வாக்குகள், கட்சி குறித்தும், சின்னம் குறித்தும் அறியாத கிராமப்புற வாக்காளர்கள் இங்கே உள்ளனர். நான் வெற்றி பெறுவதற்காக அரசியலுக்கு வரவில்லை. மாற்றத்தை கொண்டு வரவே வந்தேன். நகர்புற தொகுதியில் நான் செய்ய முடியும். இந்த கட்சிக்கு என்னுடைய பார்வை தேவைப்பட்டதாக உணர்ந்தேன். தாமரை சின்னத்தை மக்கள் அடையாளம் காண்பார்களா என்பது இங்கே மிகப்பெரிய சமூக சோதனை. இங்கே களத்தில் இருக்கும் தன்னார்வலர்களின் முக்கியமான வேலையே தாமரைக்கு அளிக்கும் வாக்கு இரட்டை இலைக்கானது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும் என்பது தான்.

நிதி, தொழில்சாலைகள், நீர் மேலாண்மை ஆகியவற்றை மத்திய அரசு கொண்டுவருவது குறித்து பேசுகிறார். அவருடைய ஒவ்வொரு பேச்சிலும் ஐ.பி.எஸ். அதிகாரியின் நிலைப்பாடு இருக்கிறது. (அவர் உடுப்பி மற்றும் சிக்கமகளூரில் காவல்துறை கண்காணிப்பாளராகவும் பின்னர் பெங்களூரு தெற்கில் டி.சி.பி. ஆகவும் இருந்தார்) - அவர் இங்கு பொது சேவைக்காக இருக்கிறார், அமைப்பை நன்கு புரிந்துகொள்கிறார். அண்ணாமலை தன்னுடைய பூர்வீகம் குறித்தும் பேசுகிறார். ”என்னுடைய போட்டி வேட்பாளர் கரூரில் இருக்கிறார். ஆனால் நானோ உங்களுடன் இருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை நாம் தினமும் கோவில் வளாகத்தில் அமர்ந்து பேசுவோம்” என்று மக்களிடம் கூறுகிறார்.

தொடர்ச்சியான கூட்டங்களில் பேசும் அவர், நீங்கள் என்னை வெற்றி பெற செய்தால், எடப்பாடி அண்ணனை முதல்வராக்கினால், அரவக்குறிச்சிக்கு மோடி மற்றும் அமித் ஷாவின் நேரடி கவனம் கிடைக்கும் என்று கூறினார். இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எதிரான அவர் இல்லை என்று கூறும் அவரை, உள்ளூர் ஜாமத் பள்ளப்பட்டி கிராமத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளது தேர்தல் போக்கை மாற்றக் கூடியதாக இருக்கும். அது அண்ணாமலையை வெகுவாக தாக்கியுள்ளது.

பாஜகவை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள அதிமுகவை வற்புறுத்தியதாக கூறப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இது சுதந்திர நாடு, சுதந்திர ஜனநாயகம் கொண்டது. மக்கள் எந்த ஒரு கட்சியுடன் சேர்வதற்கும் சொந்த காரணங்களும் தர்க்கங்களும் உண்டு என்று கூறினார். இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிய அவர் வெகுநாட்களாக அரசியலில் இருப்பதையும் கூறீனார். இங்கு நாங்கள் வெற்றி பெறுவோம். இதில் கேள்வியே இல்லை. வாழ்க்கையிலும் சரி தமிழக அரசியலிலும் சரி எதுவும் எளிதாக கிடைக்காது என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment