scorecardresearch

காடு, மலை, கடல் கடந்து பங்காற்றும் பாதுகாப்பு படை! வியக்க வைக்கும் இந்திய தேர்தல் 2019

ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சாலைகளை பாதுகாப்பதும் கூட மிக முக்கியமான வேலையாகும்.

Indian General Election 2019
Indian General Election 2019

Deeptiman Tiwary, Ritika Chopra

Indian General Election 2019 :  2017ம் ஆண்டு, சீன ராணுவ வீரர்கள் தோக்லாம் பீடபூமி பகுதியில் குவிக்கப்பட்ட போது, இந்தியா – சீனா – பூடான் எல்லைப்பகுதியில் சுமார் 60 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

Indian General Election 2019

ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரையில் சுமார் 2.5 லட்சம் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 25 ஹெலிகாப்டர்கள், 500 ரயில்கள், 17,500 வாகனங்கள், படகுகள், குதிரைகள் என 200 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா.

இந்தியா முழுவதிலும் உள்ள 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகளின் முதல் கட்டம் இன்று துவங்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு வருவது உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் காவற்படை. பல்வேறு திட்டங்கள், பிரச்சனைகள், அதற்கான முடிவுகள் என்று பயணித்து வெற்றிகரமாக முதற்கட்ட தேர்தலை நடத்துகிறது இந்தியா.

தேர்தல் ஆணையமே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எங்கே எப்போது தேர்தல் நடைபெற உள்ளது என்று அட்டவணைகள் தயார் செய்வதில் துவங்கி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்தல் ஆகியவற்றை மேற்கொள்வது தேர்தல் ஆணையம் தான்.

தேர்தல் ஆணையத்திற்கு தேவையான பாதுகாப்புகள் மற்றும் இதர உதவிகளை மற்ற அமைச்சரவையில் இருந்து பெற்றுத் தரும் வேலைகளை மேற்பார்வையிடுவது உள்துறை அமைச்சகரமாகும்.  இதர தேர்தல் பணிகள் அனைத்தையும் நடத்துதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பொறுப்புகளை மத்திய காவற்படை மேற்கொள்ளும்.

மத்திய மற்றும் மாநில காவற்படை அதிக அளவில் இடம் மாற்றவது இந்த தேர்தல் பொறுப்புகள் ஆகும். அவர்கள் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு கட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்படுவது வழக்கமாகும். காவற்படையின் வேலைக்கான முழு கால அட்டவணையையும் மத்திய உள்த்துறை அமைச்சகமும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ளும்.

அவர்களுக்கான உணவு, தங்குமிடம், ரயில் பயணங்கள் என அனைத்தையும் உறுதி செய்யும் பொறுப்பினையும் தேர்தல் ஆணையமே மேற்கொள்கிறது.   இது மிகவும் நெருக்கடியான நிலையில் பின்பற்றப்படும் பொறுப்புகள் ஆகும். தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில் காவற்படையை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது என்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய காவற்படை வீரர் ஒருவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் செயலகம் டெல்லியில் உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இது போன்ற மிகப்பெரிய தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் இல்லை. அவர்களுக்கு தேவையான அதிகாரிகளை வழங்கும் பொறுப்பினை குடியரசுத் தலைவர் அல்லது மாநிலத்தின் ஆளுநர் ஏற்றுக் கொள்வார்.

தேர்தல் தேதிகளை முடிவு செய்வது எப்படி ?

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் மற்றும் கடவுள் வழிபாட்டு முறைகளை கொண்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் நீங்கள் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் அங்கு விழாக்களும் பண்டிகைகளும் இல்லாத நாளைத் தான் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தேசம் முழுவதும் கொண்டாடப்படும் ஹோலி அன்று எங்களால் தேர்தலை நடத்த இயலாது. அதே போன்று தான் பிராந்திய விழாக்கள் நடைபெறும் போதும் எங்களால் தேர்தலை நடத்த இயலாது என்கிறார் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர்.

பொது விடுமுறை நாட்களை பட்டியலிடுவது தேர்தல் ஆணையத்தின் முதல் வேலை. அதன் பின்பு ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த வகையான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்பதை பட்டியல் இடுவது அடுத்த வேலை. முக்கால்வாசி வடகிழக்கு மாநில மக்கள் ஞாயிறு அன்று தேவலாயங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளானர். எனவே அங்கு ஞாயிறுகளில் தேர்தல் நடத்த மாட்டோம். அதே போன்று கேரளாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகம் உள்ளது. அதனால் அங்கு வெள்ளிக்கிழமைகளில் தேர்தல் நடத்தமாட்டோம்.

அதே போன்று மழைகாலங்கள் மற்றும் இதர கால சூழல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ள்ளப்படும். வடகிழக்கு பகுதிகளில் ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தலை நடத்திமுடித்துவிடுவோம். தேர்தல் பட்டியல் தயார் செய்வதற்கு முன்பே பல்வேறு டம்மி காலண்டர்களில் பலமுறை தேதிகளை முடிவு செய்த பின்பே தேர்தல் தேதிகள் இறுதி வடிவம் பெறும். மேலும் மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும்.

காவற்படையின் பங்கு – Indian General Election 2019

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இருக்கும் காவற்படை வீரர்களின் எண்ணிக்கையை எப்படி சரியாக கையாண்டு, தேர்தல் பணியில் அமர்த்துவது என்பது குறித்த விரிவான உரையாடல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும். எந்த இடங்களில் எல்லாம் மிகக் குறைவான போக்குவரத்தும், இடமாற்றமும் தேவைப்படுகிறது என்பது பட்டியலிடப்படும்.

காவற்படை வீரர்கள் பயணிக்கும் தூரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். திரிபுராவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை அடுத்த தேர்தல் பணிக்காக கன்னியாகுமரி அனுப்பவது என்பது நடைமுறைக்கு ஆகாத ஒன்றாகும். எனவே மிகக்குறைவான தூரத்திற்கு காவற்படையினரை இடம் மாற்றம் செய்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெறும்.

கிளர்ச்சிகள் அதிகமாக நடைபெறும், நக்சலைட்டுகள் மற்றும் மாவோய்ஸ்ட்டுகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தேர்தல்கள் முதலாவதாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல்கள் முதற்கட்டமாக நடைபெற்றுவிடும். அந்தமான் நிக்கோபர் தீவுகள், லச்சத்தீவுகள், மற்றும் உத்திரகாண்ட் மலைப்பகுதிகளில் பாதுக்காப்புப் படையின் கவனம் அதிகம் இருக்கும்.

இங்கு செல்வதற்கு அதிக நாட்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் இருக்கும் பாதுகாப்பு படையினரும், தமிழ்நாட்டில் இருக்கும் பாதுகாப்பு படையினரும் நான்கு நாட்கள் கப்பல் வழியாக அந்தமான் தீவுகளை அடைவார்கள். மலைப்பகுதிகளுக்கு செல்வதற்கான நேரம் அதிகமாக இருக்கும். அவர்கள் தங்களின் இடத்திற்கு சென்றுவிட்டால் பின்பு தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற ஆரம்பித்துவிடும்.

நக்சல்கள் அதிகம் வாழும் பகுதியில் பௌணர்மி நிலவுக்கான நாட்களை கணக்கில் கொண்டே தேர்தல்கள் நடத்தப்படும். உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினர் கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி அனுப்பப்படுவார்கள். பிகாரில் தெற்கில் இருந்து கிழக்கு பிறகு மேற்கு என பாதுகாப்புப் படையினர் பிரிவார்கள். இதன் மூலம் கடைசி இரண்டு கட்ட தேர்தல்களில் பிகார் மற்றும் உ.பி.யில் மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும் மேற்கு பிகார் மற்றும் உ.பி.யின் புர்வான்சல் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த இயலும்.

வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வங்கம், பிகார், மற்றும் ஒரிசா மாநிலங்களில் தேர்தல் பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள். உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினர் தேர்தல் முடியும் வரை அங்கு தான் இருப்பார்கள். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இன்று தேர்தல் பணிகளில் இருப்பவர்கள் அப்படியே கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.

களப்பணியில் பாதுகாப்பு படையினர்

பாதுகாப்புப் படையினருக்கு தேவையான உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டியதன் முழு பொறுப்பும் மாநில அரசினுடையது. சத்திஸ்கர், சுக்மாவில் தேர்தல் பணி நடைபெறுகிறது என்றால் அங்கு மணல் மூட்டைகள், ராணுவ கூடாரங்கள், மற்றும் மோர்ச்சாக்களை அமைக்கும் பணியும் அதில் அடக்கம்.

வாக்குச்சாவடிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கும் இடம் ஆகியவற்றிற்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது இவர்களின் வேலையில்லை. ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சாலைகளை பாதுகாப்பதும் கூட மிக முக்கியமான வேலையாகும். லெஃப்ட் விங் எக்ஸ்ட்ரிமிஸ்ட்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ரோட் ஓப்பனிங் பார்ட்டிகளின் வேலை அதிகமாக இருக்கும். லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்களுடன் தொடர்பிலேயே இருக்கும் மக்கள், எங்கேனும் சிறிது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால், எங்களுக்கு சமிக்ஞை அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

2.5 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமல்லாமல், லட்சக்கணக்கில் மாநில காவலர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கும் பொறுப்பினை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தன்மையினைப் பொறுத்து 5 முதல் 100 பாதுகாப்புப் படை வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

சாலைகள் இல்லாத வழிகளிலும் கூட பயணித்து ஜனநாயக பொறுப்பினை மக்கள் ஆற்ற வேண்டும் என்று மணிக்கணக்கில் நாட்கணக்கில் தேர்தல் அதிகாரிகள் பயணிக்கும் நடைமுறைகளும் இங்கு உண்டு. தேர்தல் நடக்கும் இடங்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.

மேலும் படிக்க : Indian general election 2019 live updates : ஆந்திராவில் களைக்கட்டும் தேர்தல்.. திரைப்பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு!

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Indian general election 2019 explained anatomy of a giant election