scorecardresearch

Kerala Election 2021 Updates : யுடிஎஃப் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி

Kerala, West Bengal Assembly Election 2021: கேரளா மற்றும் மேற்கு வங்க மூன்றாம் கட்ட தேர்தல்கள் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Kerala, West Bengal Assembly Election 2021: ஒரே கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 140 தொகுதிகளில் தேர்தலை சந்திக்க உள்ளது கேரளா. மலப்புரம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குன்ஹாலி குட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாக உள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 25 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜோசப்) 10 இடங்களிலும், ரெவலூஸ்னரி சோசியலிஸ்ட் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. இடதுசாரி முன்னணியில் 2 முறை பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் கட்சியினர் 77 இடங்களிலும், சி.பி.ஐ கட்சி 24 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (எம்) 12 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க :  தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்

மேற்கு வங்கம் மூன்றாம் கட்ட தேர்தல்

West Bengal 3rd Phase Elections Live Updates : 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி, மற்றும் பாஜக என்று மும்முனை போட்டிகள் அங்கே நடைபெற்று வருகிறது. மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 என 8 எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் மூன்றாம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஹௌரா, ஹூக்லி, மற்றும் தெற்கு 24 பாரகனாஸ் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
18:02 (IST) 6 Apr 2021
யுடிஎஃப் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்- காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி

கேரளாவில் ஒரே கட்டமாக இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது வாக்கை பதிவு செய்த பிறகு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி, “கடந்த சில நாட்களாக, அரசு எதிர்ப்பு அலை மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. கேரள வாக்காளர்கள் எல்.டி.எஃப்பை அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். யு.டி.எஃப் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும். மேலும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை வலுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் அரசாங்கம் கேரளாவில் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

17:40 (IST) 6 Apr 2021
கேரள சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி வரை 70% வாக்குகள் பதிவாகியுள்ளன

கேரள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மாலை 5 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாங்கியுள்ளது.

17:38 (IST) 6 Apr 2021
பயன்னூர் தொகுதியில் ஒரு சாவடியில் வாக்குப்பதிவு அதிகாரி தாக்கப்பட்டார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர்கள் பயன்னூர் கண்டங்கலி பள்ளியின் சாவடியில் பணியாற்றிய தலைமை அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. பனூரைப் பூர்வீகமாகக் கொண்ட முகமது அஷ்ரப் கலதில் மற்றும் தலசேரி டிஐஏ கல்லூரியின் பேராசிரியர் ஆகியோர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரேஷன் கார்டுடன் வாக்களிக்க வந்த வாக்காளரை தலைமை அதிகாரி அனுமதிக்கவில்லை, அதே நேரத்தில் வெளிநடப்பு செய்தபோது தாக்குதல் நடந்தது. தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள ஆவணங்களில் ரேஷன் கார்டு கிடைக்காததால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று பிரசிடிங் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாக்குப்பதிவு அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. அடிபட்ட தலைமை அதிகாரி பயன்னூர் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு பதிலாக மற்றொரு அதிகாரியை நியமித்த பின்னர் தேர்தல் மீண்டும் தொடங்கியது.

17:13 (IST) 6 Apr 2021
மாலை 4 மணி நிலவரப்படி கேரளாவில் 65.93% வாக்குப்பதிவு

கேரள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மாலை 4 மணி நிலவரப்படி 65.93% வாக்குகள் பதிவாங்கியுள்ளது.

15:40 (IST) 6 Apr 2021
கேரளாவில் 56% வாக்குப்பதிவு

மதியம் 3 மணி நிலவரப்படி கேரளாவில் 56 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

14:49 (IST) 6 Apr 2021
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுஜாதா மோண்டலை பாஜகவை சேர்ந்தவர்கள் தாக்கி விரட்டியதாக மம்தா பானர்ஜி புகார். மேலும் வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய பாஜகவினர் திரிணாமூல் கட்சியை சேர்ந்தவர்களை தாக்குவதாகவும் மம்தா குற்றச்சாட்டு.

14:35 (IST) 6 Apr 2021
கேரளாவில் 48.71% வாக்குப்பதிவு

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது . மதியம் 1:30 மணி நிலவரப்படி கேரளாவில் 48.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

14:30 (IST) 6 Apr 2021
மேற்கு வங்கத்தில் 53.89 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 31 இடங்களில் 53.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

13:24 (IST) 6 Apr 2021
‘முஸ்லீம் வாக்குகளும் நழுவுகிறதா?’ – பிரதமர் மோடி கேள்வி!

திரிணாமுல் காங்கிரஸின் பலமாக மம்தா கருதிக் கொண்டிருக்கும், முஸ்லீம்களின் வாக்குகளும் அவர்களிடமிருந்து நழுவுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னர், நந்திகிராமில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட மமதா, ‘முஸ்லீம்கள் ஒன்றிணைய வேண்டும். உங்களின் வாக்குகளை பிரிக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது, என பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

12:36 (IST) 6 Apr 2021
தருர் மாவட்டத்தில் 36.34% வாக்குப்பதிவு!

கேரளாவில் ஒரே கட்டமாக 140 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நன்பகல் 12 மணி நிலவரப்படி, அதிகப்படியாக, தருர் மாவட்டத்தில் 36.34% வாக்குகள் பதிவாகியுள்ளது. பாலக்காட்டில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் குறைவாக 40% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.

12:25 (IST) 6 Apr 2021
யுடிஎஃப் வெற்றி உறுதி; சசி தரூர் எம்.பி!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்களித்தப் பின், செய்தியாளர்களிடன் பேசிய காங்கிரஸ் எம்.பி.சசி தரூர், ‘காலை பத்து மணி வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், யுடிஎஃப் கூட்டணி வெற்றிப் பெறுவது உறுதி’, என தெரிவித்துள்ளார்.

12:17 (IST) 6 Apr 2021
கேரளாவில் 33.13% வாக்குப்பதிவு!

காலை 11.30 மணி நிலவரப்படி, கேரளாவில் 33.13% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

12:09 (IST) 6 Apr 2021
கேரள மக்கள் யார் ஆள வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள்; பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தப் பின், ‘எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். கேரள மக்கள் தங்களை யார் ஆள வேண்டும் என்பதை, முன்னரே முடிவெடுத்துவிட்டனர். அவர்களின் முடிவின் இறுதிப் படியாக, வாக்குப் பெட்டியில் வாக்குச் செலுத்தி வருகின்றனர்', என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

12:02 (IST) 6 Apr 2021
40 தொகுதிகளில் 22 -ல் வெற்று; அசாம் பாஜக உறுதி!

தற்போது நடைபெறும் 40 தொகுதிகளுக்கான தேர்தலில், கட்டாயம் 22 இடங்களில் பாஜக வின் வெற்றி உறுதியாகியுள்ளது. மேலும், சில தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அசாம் மாநில பாஜக தலைவர், ஹிமந்தா பிஸ்வா சர்மா வாக்களித்த பின், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

11:55 (IST) 6 Apr 2021
புதுவையில் 20.07% வாக்குப்பதிவு! .

புதுவையில் 11 மணி நிலவரப்படி 20.07% வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

11:50 (IST) 6 Apr 2021
கேரளாவில் பசுமை வாக்குசாவடிகள்!

கேரள மாநிலம் திருவானந்தபுரத்தில் உள்ள வெங்கணுர் வாக்குசாவடி பசுமை வாக்குசாவடியாக அமைக்கப்பட்டுள்ளது வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

11:43 (IST) 6 Apr 2021
வாக்களித்த அசாம் பாஜக தலைவர்!

அசாம் பாஜக தலைவரும் அமைச்சருமான ஹிமந்தா பிஷுவா சர்மா கவ்ஹாத்தியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார்.

11:13 (IST) 6 Apr 2021
கடவுள்களுக்கு வாக்குகள் இருந்தால் அவர்கள் இடதுசாரிகளுக்கே வாக்களிப்பார்கள்

தன்னுடைய வாக்கினை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மாநில சி.பி.எம். பொதுச்செயாலாளர் கொடியேறி பாலக்கிருஷ்ணன், கடவுள்களுக்கு வாக்குகள் இருந்தால் அவர்கள் இடதுசாரிகளுக்கே வாக்களிப்பார்கள் என்று கூறினார்

11:12 (IST) 6 Apr 2021
காலை 09:30 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்
Voting turnout in Kerala at 9:30 am touches 16.07% @IndianExpress— Vishnu Varma (@VishKVarma) April 6, 2021
10:15 (IST) 6 Apr 2021
கேரள சுகாதாரத்துறை அமைச்சார் ஷைலஜா வாக்களித்தார்

கோவிட் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கேரளத்தில் வெறும் 0.4% தான். நாங்கள் நிறைய மேம்பாட்டு திட்டங்களை கொரோனா காலத்திலும் கொண்டு வந்து மக்களை பயனடைய வைத்தோம். எங்களுக்காக வாக்களியுங்கள் என்று கூறினார் அவர். கண்ணூரில் அவருடைய வாக்கினை பதிவு செய்தார்.

09:56 (IST) 6 Apr 2021
நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின்கரா வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள்

09:52 (IST) 6 Apr 2021
ரமேஷ் சென்னிதலா வாக்கினை பதிவு செய்தார்

கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தன்னுடைய வாக்கினை ஹரிபத்தில் உள்ள மன்னரசலா பள்ளி அளித்தார்.

09:41 (IST) 6 Apr 2021
வாக்களித்த பினராயி விஜயன்

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

09:09 (IST) 6 Apr 2021
வர்களாவில் வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள்

வர்களாவில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள்

வர்களாவில் வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள்

09:07 (IST) 6 Apr 2021
திரிணாமுல் தலைவர் வீட்டில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் கௌதம் கோஷ் வீட்டில் மூன்று ஈ.வி.எம். மெஷின்கள் மற்றும் 4 வி.வி.பி.ஏ.டி மெஷின்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் செக்டர் அலுவலரை பணியில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்

08:19 (IST) 6 Apr 2021
மெட்ரோமென்

பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரும் இந்த தேர்தல். நான் நிச்சயமாக இந்த பாலக்காடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி அடைவேன். என்னுடைய வருகை பாஜக மீதான மக்களின் அபிப்ராயத்தை மாற்றியுள்ளது என்று வாக்களித்த பின்னர் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் பேச்சு.

08:17 (IST) 6 Apr 2021
பினராயி வாக்குச்சாவடியில் கேரள முதல்வர்

கண்ணூரில் உள்ள பினராயி கிராமத்தில் அமைந்திருக்கும் வாக்குசாவடிக்கு வருகை புரிந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Kannur: Kerala CM Pinarayi Vijayan arrives at a polling booth in Pinarayi to cast his vote#keralaelections pic.twitter.com/Uy3XvLpatw— ANI (@ANI) April 6, 2021
07:29 (IST) 6 Apr 2021
வாக்களித்த மெட்ரோமென்

மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஈ. ஸ்ரீதரன் தன்னுடைய வாக்கினை தற்போது பொன்னனியில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்துள்ளார். பாஜக சார்பில் போட்டியிடும் அவர்

'Metro Man' E Sreedharan casts vote at a polling booth in Ponnani #keralaelections pic.twitter.com/Dg6eyvVxBU— ANI (@ANI) April 6, 2021
07:10 (IST) 6 Apr 2021
475 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் என்று முறையே 234, 140, 40, 31 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 475 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

06:51 (IST) 6 Apr 2021
மூன்றாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் களத்தில் அசாம்

மொத்தமாக உள்ள 126 தொகுதிகளில் ஏற்கனவே 86 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுற்றது. இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் மே 2ம் தேதி அன்று வெளியாகும்.

06:48 (IST) 6 Apr 2021
இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது மூன்றாம் கட்ட மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்

அப்தால்பூர் எஃப்.பி. ஆரம்ப பள்ளியில் “மோக் போல்” நடைபெற்று வரும் காட்சிகள். இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்கிறது மேற்கு வங்க மாநிலம்.

West Bengal to vote today in the third-phase of #assemblyelections2021 Mock poll underway in the polling booth at Abdalpur FP Primary School in Diamond Harbour, South 24 Parganas district pic.twitter.com/jEXv1S3wed— ANI (@ANI) April 6, 2021
06:35 (IST) 6 Apr 2021
தயார் நிலையில் இருக்கும் பினராயி விஜயனின் தொகுதி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தொகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடி ஒன்றின் காட்சி. வாக்க்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

Voting for the single-phase #keralaelections to begin shortlyVisuals from inside a polling station in Pinarayi village in the Kannur district pic.twitter.com/gMp6VITG92— ANI (@ANI) April 6, 2021

Web Title: Kerala west bengal assembly election 2021 voting update wb kerala election 2021 latest news opinion poll constituencies list