ஆடியோ ஆதாரம் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது – அமைச்சர் ஜெயக்குமார்

மிழகத்தில் நடைபெறும் அனைத்துவிதமான முக்கியச் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன்.

Latest Tamil news live updates : தமிழகத்தில் ஃபானி புயல் வரலாம் என்ற எச்சரிக்கை காணாமல் போக, வடக்கு கடலோர மாவட்டத்தினர் ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்தே இன்னும் வெளிவரவில்லை அவர்கள் என்பதால், மீண்டும் ஒரு இயற்கை பேரழிவிற்கு கால நேரமும், மக்களின் மனமும், சூழ்நிலையும் இன்னும் பழகவில்லை.

ஃபோனி புயல் தவிர்த்து இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்துவிதமான முக்கியச் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன்.

Latest Tamil news: திமுகவின் மே தின வாழ்த்துகள்

தூத்துக்குடியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய தங்கை மற்றும் எம்.பி.யுமான கனிமொழி ஆகியோர் சிவப்பு நிற உடையணைந்து ஊரணியாக சென்றனர்.

Live Blog

உழைப்பாளர்கள் தினம், 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல், பட்ட மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு போன்ற செய்திகளையும் நீங்கள் இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்.

16:08 (IST)01 May 2019
திமுகவிற்கும் அமமுகவிற்கும் இடையே இருக்கும் உறவு வெளிப்பட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி

கட்சியை மீறி செயல்பட்டதால் மூன்று எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இதனால் ஏன் ஸ்டாலின் கோபமுறுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர்.

14:23 (IST)01 May 2019
3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம்

வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே புகார் அளிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

12:30 (IST)01 May 2019
மே தின நிகழ்வில் கலந்து கொண்ட திமுகவினரின் புகைப்படங்கள்
12:18 (IST)01 May 2019
உழைப்பாளர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கனிமொழி

உழைப்பாளர்கள் தினத்திற்கு தன்னுடைய வாழ்த்துகளை கூறிய கனிமொழி

11:39 (IST)01 May 2019
எதிர்கட்சியினர் என்றால் சபாநாயகர் மீது குற்றம் சுமத்தத்தான் செய்வார்கள் - பிரேமலதா விஜயகாந்த்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்துள்ளது திமுக. இது குறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம். நடைபெற இருக்கின்ற நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

11:19 (IST)01 May 2019
பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலின் 25 நாட்களில் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என பகல் கனவு காண்கின்றார் - தூத்துக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.

11:09 (IST)01 May 2019
மே தின கொண்டாட்டத்தில் தேமுதிக

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய மே தினம். விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

11:08 (IST)01 May 2019
தேமுதிக கட்சியின் மே தின வாழ்த்துகள்
11:04 (IST)01 May 2019
Latest Tamil Nadu News

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற உழைப்பாளர்கள் தின பேரணியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர், தொழிலாளர்களுக்கு உற்ற நண்பனாக திமுக தான் இருந்துள்ளது என்று கூறியுள்ளார். இன்றைய பேரணியில் கலந்து கொண்டு திமுக தலைவர் பேசிய உரையின் வீடியோ 

அரவக்குறிச்சியில் பெறப்பட்ட 91 மனுக்களில் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.  திருப்பரங்குன்றம் தொகுதியில் பெறப்பட்ட 63 மனுக்கள்ளில் 44 மனுக்கள் ஏற்கப்பட்டன.

திசை மாறிய ஃபோனி புயல் ஒடிசாவில் இன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அங்கு தளர்த்தப்பட்டுள்ளன.

ஃபோனி புயல் பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க 

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close