Fani cyclone chennai weather forecast: ‘ஃபனி புயல் பாதிப்பை தவிர்க்க 14 குழுக்கள் தயார்’ – பேரிடர் மீட்புப் படை

Fani cyclone today updates :அதிர்ஷ்டம் இருந்தால் வட கடலோர பகுதியில் நாளையும் மழை பெய்யும்.

chennai weather forecast
chennai weather forecast

Fani cyclone live updates : தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நீர் ஆதாரங்கள் வற்றி வரும் நிலையில் மழை இல்லாததால் தமிழகத்தின் பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

இதனால் தமிழக மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 3-ம்தேதி இந்தப் புயல் ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபனி புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது என கூறப்படும் நிலையில், மழைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

மிகப்பெரும் புயலான ஃபனி, ரேடார் கருவியின் எல்லைக்குள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அதன் இருப்பிடத்ததை பொருத்தளவில் அட்ச ரேகை 84.5 E- ல் உள்ளதுடன், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அட்ச ரேகை 82.5 E-க்குள் வந்தால் நமக்கு நல்ல மழை கிடைக்கும்.

மேலும் படிக்க.. “இது வெறும் டிரைலர் தான்; இனிமேதான் இருக்கு” – லிஸ்ட் போட்டு எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்

வட தமிழக்ததின் உட்பகுதியில் இன்றிரவும், அதிர்ஷ்டம் இருந்தால் வட கடலோர பகுதியில் நாளையும் மழை பெய்யும். இந்த வார இறுதியில் இருந்து வெயில் கொளுத்த தொடங்கி விடும்.

Live Blog

Fani cyclone live updates : பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வானிலை மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபனி புயல் குறித்த லேட்டஸ் தகவல்களை ஆங்கிலத்தில் வாசிக்க English


18:23 (IST)01 May 2019

14 குழுக்கள் தயார்

ஃபனி புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடாக சென்னை எழும்பூர் ரயில்வே அலுவலகத்தில் 2 குழுக்களும், அரக்கோணத்தில் 12 குழுக்களும் தயார் நிலையில் உள்ளது.

– பேரிடர் மீட்புப் படை

16:55 (IST)01 May 2019

Chennai Weather: சென்னையில் மேகமூட்டம், நெல்லையில் சூறைக் காற்று

ஃபனி புயல் சென்னையை விட்டு விலகிச் செல்கிறது. இன்று முழுவதும் சென்னை மேகமூட்டமாக இருந்தாலும், வெப்பம் அதிகமாகவே இருந்தது.

அதேசமயம் தமிழகத்தின் இதர பல பகுதிகளில் காற்று வீசியது. நெல்லை மாவட்டம் பணகுடி, தெற்கு வள்ளியூர், கும்பிளம்பாடு, ரோஸ்மியாபுரம், வடக்கன்குளம், விசுவாசபுரம், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று காரணமாக சுமார் 1லட்சம் வாழைகள் சாய்ந்தன. தருமபுரி அருகே பலத்த சூறாவளி காற்று வீசியதில் வீடுகள் , மின்கம்பம், வாழைமரங்கள் சேதம் அடைந்தன.

16:08 (IST)01 May 2019

cyclone fani effect : வேலூரில் சூறாவளி காற்று!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மதியம் முதல் சூறாவளி காற்று வீச தொடங்கியுள்ளது. 

14:56 (IST)01 May 201913:06 (IST)01 May 2019

Tamilnadu rainfall report : தமிழகத்தில் பரவலாக மழை!

12:49 (IST)01 May 2019

met report : சென்னை வானிலை மையம் அறிக்கை!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது. 

11:53 (IST)01 May 2019

school holidays : பள்ளிகளுக்கு விடுமுறை!

புயல் செல்லும் பகுதியில் மட்டும் சுமார் 10 கோடி மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்த புயலால் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒடிசாவில் இப்போதே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

11:38 (IST)01 May 2019

10 கோடி மக்கள் ஃபனியால் பாதிக்கப்படுவார்கள்

ஆந்திரா, ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு  வங்கம், மற்றும் பிகாரில் உள்ள 10 கோடி மக்களுக்கு பெரிய சேதாரத்தை உருவாக்கலாம் இந்த ஃபனி என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

11:28 (IST)01 May 2019

Tamilnadu weather man : தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை!

மிகப்பெரும் புயலான ஃபனி, ரேடார் கருவியின் எல்லைக்குள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அதன் இருப்பிடத்ததை பொருத்தளவில் அட்ச ரேகை 84.5 E- ல் உள்ளதுடன், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அட்ச ரேகை 82.5 E-க்குள் வந்தால் நமக்கு நல்ல மழை கிடைக்கும். 

வட தமிழக்ததின் உட்பகுதியில் இன்றிரவும், அதிர்ஷ்டம் இருந்தால் வட கடலோர பகுதியில் நாளையும் மழை பெய்யும். இந்த வார இறுதியில் இருந்து வெயில் கொளுத்த தொடங்கி விடும். 

மழை வந்தால் இன்றிரவு வரும். அல்லது நாளை வரலாம். இதை விட்டால் சென்னைக்கு ஃபனி புயலால் மழை கிடைக்க வாய்ப்பில்லை. 

10:38 (IST)01 May 2019

Tamilnadu rain : சேலத்தில் மழை!

|சேலம் மாவட்டம் வாழப்பாடி, முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி,புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது 

10:37 (IST)01 May 2019

rain in tamilnadu : நாமக்கலில் மழை!

நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது 

10:37 (IST)01 May 2019

Fani cyclone in odisha : சுற்றுலா பயணிகளுக்கு உத்தரவு!

மே 3-ம் தேதி ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் ஃபனி புயல் கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் நகரை விட்டு வெளியேற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது 

10:35 (IST)01 May 2019

Fani cyclone live : தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு!

ஃபனி புயல் எச்சரிக்கையை அடுத்து ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு  என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

10:15 (IST)01 May 2019

Cyclone fani move : நகர தொடங்கிய ஃபனி!

வடமேற்கு திசையில் மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபனி புயல்  நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

09:54 (IST)01 May 2019

Cyclone fani latest : மழைக்கு வாய்ப்பு!

ஃபனி கரையை கடக்கும் போது, மேற்குவங்கத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மற்றும் விஜயநகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

09:37 (IST)01 May 2019

4 மாநிலங்களுக்கு முன்கூட்டியே புயல் நிவாரணம்!

4 மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடியை நிவாரண நிதியாக முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு ரூ.309.37 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு ரூ.235.50 கோடியும் வழங்கப்படுகிறது.

09:24 (IST)01 May 2019

cyclone fani : ஃபனி கரையை கடக்கும் இடம்!

மே 3 ஆம் தேது மாலை ஃபனி புயலானது ஒடிசாவில் கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

09:04 (IST)01 May 2019

Fani cyclone : காற்றின் வேகம்!

ஃபனி புயலானது கரையை கடக்கும் போது  205 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

08:44 (IST)01 May 2019

Fani cyclone update : கஜா விட அபாயகரமானது!

வரும்3 ஆம் தேதி மாலை ஒடிசாவில் கரையை கடக்கவுள்ள ஃபனி புயல். கஜாவை விட அபாயகரமானது என்பதால் ஒடிசாவை சுற்றியுள்ள 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

chennai weather forecast live updates: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி(Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஒடிசா, தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபனி புயலானது(Cyclone Fani) மே.3ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

ஃபனி புயலை எதிர்கொள்வது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது இரண்டவது நாளாக நேற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.10 லட்சம் மக்கள் வரை தங்கும் வகையிலான 879 முகாம்கள் ஒடிசாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Cyclone Fani Live Updates Chennai Weather Today
chennai weather forecast live updates

எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

41 இடங்கள் பாதிப்பு மிகுந்த பகுதியாக இருக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திரவில் (8), ஒடிசா (28), மேற்குவங்கம் (5). இதன் காரணமாக 13 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மேற்குவங்கம் மற்றும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க.. ஃபனி புயல் நகரும் பாதை முழு விவரம், 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி

புயல் கரையை கடக்கும் போது, தாழ்வுநிலை பகுதிகளான கஞ்சம், குர்தா, புரி, ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் எற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு வரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஃபனி புயலால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சில பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மே.3 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் போது, மேற்குவங்கத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மற்றும் விஜயநகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fani cyclone chennai weather forecast live updates

Next Story
டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்DMK files Complaint against Tamil Nadu Speaker Dhanapal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com