ஏலத்தில் எடுக்கப்படும் ஊராட்சித்தலைவர், துணைத்தலைவர்... கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

ரூ.50 லட்சம் இருந்தால் ஊராட்சி தலைவர்... துணைத் தலைவர் பதவிக்கு ரூ. 15 லட்சம் நிர்ணயம்!

ரூ.50 லட்சம் இருந்தால் ஊராட்சி தலைவர்... துணைத் தலைவர் பதவிக்கு ரூ. 15 லட்சம் நிர்ணயம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Updates

Tamil Nadu News Updates

Local body elections bidding Rs 50 lakhs for Panchayat president : தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு ஏலம் நடத்தப்பட்டுள்ளது.  ஏலத்தில் ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப தற்போது அந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவின் படி ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்திருக்கும் நடுக்குப்பம் பகுதியில் இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. அந்த ஏலத்தில் ஊர் தலைவர்கள், ஊர் பெரியவர்கள் என அனைவரும் கூடியிருந்தனர். அப்போது அங்கிருக்கும் ஒருவர் சக்திவேலை ஊராட்சி தலைவராகவும், முருகன் என்பவரை துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். அவர்கள் அந்த ஏலத்தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழர்

Advertisment
Advertisements

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, கடலூர் மாவட்ட ஆட்சியர் வி. அன்புசெல்வன் இந்த விவகாரம் குறித்து விசாரணையை தீவிரபடுத்தினார். இந்த விவகாரம் குறித்து சக்தி வேலிடம் கேள்வி எழுப்பிய போது, “நான் வெறும் 9-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கின்றேன். என்னால் எப்படி ரூ. 50 லட்சம் கட்ட இயலும்? எனக்கு எதிராக யாரோ சதி வேலை செய்கின்றார்கள்” என்று கூறினார். ஊர் மக்களிடம் கேட்ட போது, அவர்கள் இந்த கிராமத்தின் நலனுக்காக முக்கிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினார்கள். அதனால் தான் அவர்கள் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் என்று கூறுகின்றனர். இந்த விவகாரத்தால் தமிழக அரசியல் களம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள!

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: