Lok Sabha Election 2019 AIADMK Candidates list : அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற பட்டியலை நேற்று(மார்ச்.17) காலை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பலக்கட்ட இழுபறிக்கு பிறகு, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. 20 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
Lok Sabha Election 2019 AIADMK Candidates list
அந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேமுதிக மற்றும் பாமக தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இன்று மாலை அல்லது நாளைக்குள் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று பாஜக தரப்பு கூறியுள்ளது. இந்த கூட்டணியில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி தலா ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியல்
திருவள்ளூர் (தனி) - டாக்டர். பி. வேணுகோபால்
சென்னை தெற்கு - ஜெயவர்தன்
காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
திருவண்ணாமலை - அக்ரி.கிருஷ்ணமூர்த்தி
ஆரணி - செஞ்சி வே.ஏழுமலை
சேலம் - கே.ஆர்.எஸ். சரவணன்
நாமக்கல் - காளியப்பன்
ஈரோடு - வெங்கு என்ற ஜி.மணிமாறன்
திருப்பூர் - எம்.எஸ்.எம். ஆனந்தன்
நீலகிரி - எம்.தியாகராஜன்
பொள்ளாச்சி - சி. மகேந்திரன்
கரூர் - மு.தம்பிதுரை
பெரம்பலூர் - என்.ஆர்.சிவபதி
சிதம்பரம் - பொ.சந்திரசேகர்
மயிலாடுதுறை - எஸ்.ஆசைமணி
நாகப்பட்டினம் - தாழை. ம.சரவணன்
மதுரை - விவிஆர் ராஜ் சத்யன்
தேனி - ரவீந்திரநாத் குமார்
நெல்லை - மனோபாண்டியன்
மேலும் படிக்க - PMK Candidates List: முதற்கட்ட மக்களவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாமக!
சட்டசபை இடைத்தேர்தல் : 18 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல்
18 தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலுக்கான பட்டியலையும் வெளியிட்டது அதிமுக.
பூந்தமல்லி - ஜி.வைதிய நாதன்
பெரம்பூர் - ஆர்.எஸ். ராஜேஷ்
திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம்
சோளிங்கர் - ஜி.சம்பத்
குடியாத்தம் - கஸ்பா. ஆர். மூர்த்தி
ஆம்பூர் - ஜி.ஜோதிராமலிங்கராஜா
ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
பாப்பிரெட்டிபட்டி - ஏ. கோவிந்தசாமி
அரூர் - வி.சம்பத்குமார்
நிலக்கோட்டை - எஸ். தேன்மொழி
திருவாரூர் - ஆர்.ஜீவானந்தம்
தஞ்சை - ஆர். காந்தி
மானாமதுரை - எஸ்.நாகராஜன்
ஆண்டிபட்டி - ஏ.லோகிராஜன்
பெரியகுளம் - எம்.முருகன்
சாத்தூர் - எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்
பரமக்குடி - சதன்பிராபகர்
விளாத்திகுளம் - பி.சின்னப்பன்
மேலும் படிக்க : திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்