லோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…

இந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Lok Sabha Election 2019 Expenditure Report
Lok Sabha Election 2019 Expenditure Report

Lok Sabha Election 2019 Expenditure Report : இந்தியாவில் 7 கட்டங்களாக 17வது மக்களவைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரையில் 542 தொகுதிகளில் தேர்தல் நடத்தபட்டு அதன் முடிவுகள் மே மாதம் 23 தேதி வெளியிடப்பட்டது.

மே 30ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அவரோடு 57 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கான பொறுப்புகள் மே 31ம் தேதி ஒதுக்கப்பட்டது.

Lok Sabha Election 2019 Expenditure Report : Centre for Media Studies வெளியிட்டுள்ள அறிக்கை

டெல்லியை சேர்ந்த சி.எம்.எஸ் (Centre for Media Studies) என்ற தனியார் ஆய்வு அமைப்பு நேற்று தேர்தல் செலவுகள் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டது.

90 கோடி மக்கள் வாக்களித்த இந்த தேர்தலில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், இது கடந்த முறை தேர்தலை விட இரட்டிப்பு மடங்கு அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வாக்குக்கு 700 ரூபாய் வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் தான் அதிக அளவு பணம் செலவு (6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2024ம் தேர்தலில் இந்த செலவானது நிச்சயம் ஒரு ட்ரில்லியன் ரூபாய் என்ற மதிப்பினை எட்டும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் பாஸ்கர ராவ் அறிவித்துள்ளார்.

செலவுகள் அதிகம் செய்தது யார்?

60 ஆயிரம் கோடி ரூபாயில் தேர்தல் ஆணையம் மட்டும் சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. இந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முன்னாள் அமைச்சர்கள் யார் யார்?

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lok sabha election 2019 expenditure report by cms estimated rs 60000 crore spent

Next Story
அரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…Priyanka Gandhi Congress Party New Chief
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com