மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறாத முன்னாள் அமைச்சர்கள் யார் யார்?

Former Union ministers 2014 - 2019 : கடந்த முறை பொறுப்பு வகித்த அமைச்சர்களில் 37 நபர்களுக்கு இம்முறை அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை

Krishn Kaushik

Former Ministers dropped in Narendra Modi’s New Cabinet : இந்தியாவின் 17வது பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. அவருடன் நேற்றே மத்திய அமைச்சர்கள் (கேபினட் அமைச்சர்கள்), இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) மற்றும் இணை அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த முறை இந்த லிஸ்டில் காணாமல் போன முன்னாள் அமைச்சர்கள் பட்டியல் ஒரு பார்வை.

உடல் நலக்குறைவால் புதிய அமைச்சரவையில் பங்கேற்காத தலைவர்கள்

நிதி அமைச்சராக பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக புதிய அமைச்சரவையில் பொறுப்புகள் எதுவும் தரவேண்டாம் என்று மோடியிடம் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார். அதனால் அவருக்கு இம்முறை பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க : எனக்கு புதிதாக எந்த பொறுப்பையும் வழங்க வேண்டாம் – மோடிக்கு கடிதம் எழுதிய அருண் ஜெட்லி

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களில் இவருடைய பங்களிப்பும் மிகவும் குறைவாக இருந்தது. இவருக்கும் இம்முறை பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.

பொறுப்புகள் அளிக்கப்படாத இதர அமைச்சர்கள்

இவர்கள் மட்டுமல்லாமல் 37 முன்னாள் அமைச்சர்களுக்கு இம்முறை பொறுப்புகள் வழங்கப்படவில்லை. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, சிவில் விமானப் போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்த (Civil Aviation and Commerce) சுரேஷ் பாபு, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை (Drinking Water and Sanitation) அமைச்சராக இருந்த உமா பாரதி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ( Women and Child Development) அமைச்சராக இருந்த மேனகா சஞ்சய் காந்தி ஆகியோருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

பாஜகவின் தற்போதைய தலைவராக இருக்கும் அமித் ஷா காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜகத் பிரகாஷ் நட்டா, பாஜகவின் தலைவராக பொறுப்பேற்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன. அதனால் அவரும் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்கவில்லை.

கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக இருந்த ஆனந்த் கீத்தேவிற்கும் பதவி வழங்கப்படவில்லை. எஃகுத் துறையின் சவுத்ரி பிரேந்தர் சிங், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை தலைவர் ராதா மோகன் சிங் ஆகியோருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

கடந்த முறை 70 அமைச்சர்களின் பெயர் பட்டியலிடப்பட்டது. ஆனால் இம்முறை 57 நபர்கள் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்களில் வெறும் 33 நபர்களுக்கு மட்டுமே மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

Former Ministers dropped in Narendra Modi’s New Cabinet : விடுபட்ட முக்கிய முகங்கள்

ஓய்வுபெற்ற கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் – இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு (தனிப்பொறுப்பு), தகவல் மற்றும் ஒலிபரப்பு (தனிபொறுப்பு) துறைகளின் இணை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். அவருக்கு இம்முறை இடம் மறுக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு தனிப்பொறுப்பு மற்றும் ரயில்வே துறையின் இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார் மனோஜ் சின்ஹா. அவருக்கும் இம்முறை பொறுப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசம் காஸிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் அப்சல் அன்சாரியிடம் தோல்வியை தழுவினார்.

அல்போன்ஸ் கண்ணன்தானம் சுற்றுலாத்துறையின் தனிப்பொறுப்பு இணையமைச்சராக பதவி வகித்து வந்தார். மகேஷ் ஷர்மா கலாச்சாரம், சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் இல்லை.

முன்னாள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூன்றில் இரண்டு சதவீதம் இணை அமைச்சர்களுக்கு இம்முறை பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

34 மத்திய இணை அமைச்சர்களில் வெறும் 12 நபர்களுக்கு மட்டுமே இடம் தரப்பட்டுள்ளது. ஜெயந்த் சின்ஹா, விஜய் கோயல், ராஜென் கோஹைன், ஆனந்த்குமார் ஹெக்டே, எஸ்.எஸ். அலுவாலியா, பி.பி. சௌத்ரி, கிருஷ்ணராஜ், சத்யபால் சிங், அனுப்பிரியா படேல் ஆகியோருக்கும் இம்முறை பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை.

இதன் முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close