எனக்கு புதிதாக எந்த பொறுப்பையும் வழங்க வேண்டாம் – மோடிக்கு கடிதம் எழுதிய அருண் ஜெட்லி

உங்கள் அரசிற்கு தேவையான கூடுதல் உதவிகளை செய்ய நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்.

By: Updated: May 29, 2019, 04:13:48 PM

Former Finance Minister Arun Jaitley Letter to Modi : மே மாதம் 30ம் தேதி (நாளை) மிகவும் கோலகலமாக, பிரதமரின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் அரசியல்வாதிகள், பிரதிநிதிகள், முக்கியத் தலைவர்கள் என 6000 நபர்கள் நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் கூடுகின்றனர்.

இந்நிலையில் தனக்கு எந்த விதமான பொறுப்புகளையும் இரண்டாவது முறையாக பதவியேற்கும் மோடி அரசு தர வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

18 மாதங்களுக்கும் மேலாக உடல்நலக்குறைவிற்காக சிகிச்சை மேற்கொண்டு வரும் அருண் ஜெட்லி, மோடி கேதர்நாத்துக்கு செல்வதற்கு முன்பே தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக அறிவித்துவிட்டார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது எந்தவிதமான பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் என்னுடைய உடல்நலத்தை தான் தற்போது அதிக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Former Finance Minister Arun Jaitley Letter to Modi

இது குறித்து மோடிக்கு தான் எழுதிய கடிதத்தின் நகலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், எனக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. கடந்த ஐந்து வருடங்கள் எனக்கு சிறந்த அனுபவத்தினைக் கொடுத்துள்ளது. கேதர்நாத் செல்வதற்கு முன்பே நான் உங்களுக்கு கூறியதைப் போலவே, என் மருத்துவர்களின் ஆலோசனைப் படி என் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள ஓய்வு எடுத்துக் கொள்கின்றேன். உங்கள் அரசிற்கு தேவையான கூடுதல் உதவிகளை செய்ய நான் எப்போதும் தயாராகவே உள்ளேன். வாழ்த்துகள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் மோடி – அமித் ஷா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Former finance minister arun jaitley opts out of new narendra modi government and new cabinet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X