/tamil-ie/media/media_files/uploads/2019/03/D2WV-MTWoAAxxiH.jpg)
Lok Sabha Election 2019 Rahul Gandhi
Lok Sabha Election 2019 Rahul Gandhi : கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனுக்களை வைத்தனர்.
அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில் தற்போது கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் தளத்தில் இருந்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
In addition to Amethi, UP, Congress President @RahulGandhi will also be contesting from Wayanad, Kerala, for the Lok Sabha 2019 elections.
— Congress (@INCIndia) 31 March 2019
ஏற்கனவே உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அமேதியில் அவர் போட்டியிட இருந்த நிலையில், தன்னுடைய இரண்டாவது தொகுதியும் தற்போது ராகுலுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமேதியில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டை ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.