நதிகளை இணைக்க தனி ஆணையம்: பாஜக தேர்தல் அறிக்கையில் 75 அம்சங்கள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடந்த ஏப்ரல் 2ம் தேதி ராகுல் காந்தி வெளியிட்டார்.

Lok Sabha Elections 2019 BJP Manifesto LIVE Updates

Lok Sabha Elections 2019 BJP Manifesto LIVE Updates : 7 கட்டமாக நடைபெற இருக்கும், இந்திய பொதுத்தேர்தலின் முதல் கட்டம் நடைபெற மூன்றே நாட்கள் இருக்கின்ற நிலையில், பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

மேலும் படிக்க : காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை நிகழ்வினை நேரலையில் காண

Live Blog

உள்துறை ராஜ்நாத் சிங் தலைமையில் 12 பேர் கொண்ட குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

14:37 (IST)08 Apr 2019
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இதர முக்கியம்சங்கள்

  • கிஷான் சமான் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்
  • சபரிமலை கோவிலின் பாரம்பரியம் காக்கப்படும்
  • நாடு முழுவதும் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் கட்டப்படும். சமஸ்கிருத மொழியை பரவலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • 2025ம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்.
  • உள்கட்டமைப்பிற்காக 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
  • நாட்டில் உள்ள 101 விமான நிலையங்களை 2024ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • சிறு வணிகர்களுக்கான தேசிய வர்த்தக நல வாரியம் உருவாக்கப்படும்

12:31 (IST)08 Apr 2019
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள்

நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

12:31 (IST)08 Apr 2019
முத்தலாக் சட்டம்

முத்தலாக் சட்டம் நிறைவேற்றி இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

12:31 (IST)08 Apr 2019
பொது சிவில் சட்டம்

கால சூழல்களுக்கு ஏற்றவகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.

12:30 (IST)08 Apr 2019
விவசாயிகளின் வருமானம்

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

12:21 (IST)08 Apr 2019
நதிகளை இணைக்கும் திட்டம்

நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவுத்திட்டமான இந்த திட்டம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். 

12:20 (IST)08 Apr 2019
33% இட ஒதுக்கீடு

பெண்களுக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் 33% இட ஒதுக்கீடு அளிக்க சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்.

12:20 (IST)08 Apr 2019
எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி

மாநில அரசுடன் முறையான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தப்படும்.

12:20 (IST)08 Apr 2019
2022க்குள் அனைவருக்கும் வீடு

  • 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • ஸ்வச்ட் பாரத் திட்டத்தின் படி 100% தூய்மை இந்தியா உருவாக்கப்படும்.

12:19 (IST)08 Apr 2019
விவசாயிகளின் கடனுக்கு வட்டி கிடையாது

விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்ட் வழங்கப்படும். 60 வயதிற்கு மேலான சிறு குறு விவாசயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் வரை வட்டியில்லாத கடன் வழங்கப்படும். கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

12:15 (IST)08 Apr 2019
தீவிரவாதத்தை வேரறுப்போம்

தீவிரவாதத்திற்கு எதிராக சமரசம் இல்லாமல் செயல்படுவோம். அதிக தொழில் நுட்ப வசதிகள் கொண்ட புதிய ஆயுதங்கள் கொண்டு, தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். வடகிழக்கு இந்தியாவில் அத்துமீறி உள் நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

12:10 (IST)08 Apr 2019
48 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

12 பேர் அடங்கிய குழு தயாரித்த, 48 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் பாஜகவினர். 

12:09 (IST)08 Apr 2019
75 முக்கிய அம்சங்கள்

2022ம் ஆண்டு இந்தியா கொண்டாட இருக்கும் 75வது சுதந்திர தினத்திற்கு ஏற்றவகையில் 75 முக்கியமான அறிக்கைகளை வெளியிட உள்ளது பாஜக. இந்தியாவில் இருக்கும் கோடிக் கணக்கான மக்களிடம் கலந்தாலோசனை செய்து இந்த உறுதி மொழிப்பத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உறுதி மொழியினை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்று அமித் ஷா தன்னுடைய உரையில் கூறியுள்ளார்.

12:01 (IST)08 Apr 2019
வெளியிடப்பட்டது சங்கல்ப் பத்திரம்

12 பேர் அடங்கிய குழு இந்த தேர்தல் அறிக்கையை, ராஜ்நாத் சிங் தலைமையில் தயாரித்துள்ளது. சங்கல்ப் பத்திரம் எனப்படும் உறுதிமொழிப் பத்திரமாக இந்த பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் பாஜகவினர்.

11:58 (IST)08 Apr 2019
பொன் வார்த்தைகளால் எழுத வேண்டியவை - அமித் ஷா

2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை பாஜக செய்த சாதனைகள் அனைத்தையும் பொன் வார்த்தைகளால் பொறித்து வைக்க வேண்டியவை என்று அமித் ஷா கூறியுள்ளார்.

11:54 (IST)08 Apr 2019
5 ஆண்டுகளில் ஊழலே நடைபெறவில்லை - அமித் ஷா

கடந்த ஐந்தாண்டுகளில் எந்த விதமான ஊழலும் நடைபெறவில்லை. ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது என்றும், மோடி அரசின் ஆட்சி காலத்தில் மிக முக்கியமான 50 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமித் ஷா பேசிவருகிறார்.

11:46 (IST)08 Apr 2019
தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார் ராஜ்நாத் சிங்

உள்த்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், இன்னும் சற்று நேரங்களில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார் என்று அமித் ஷா கூறிவருகிறார். 

11:40 (IST)08 Apr 2019
முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது “சங்கல்ப் பத்திரம்” என பாஜகவால் அழைக்கப்படும் தேர்தல் அறிக்கை வெளியிடும் விழாவை துவங்கி பேசி வருகிறார் பாஜக தலைவர் அமித்ஷா. 

11:29 (IST)08 Apr 2019
தயாராகிறது இருக்கைகள்

அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி மட்டுமலாமல் இன்னும் சில முக்கியமான பாஜக தலைவர்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் 6% ஜிடிபி கல்விக்காக ஒதுக்கப்பட்டது, வறுமை கோட்டை ஒழிக்கும் வகையில், அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி, நீட் போன்ற தேர்வுகளில் இருந்து விதிவிலக்கு போன்ற சிறப்பம்சங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Title:

Lok sabha elections 2019 bjp manifesto live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close