Advertisment

3 முக்கிய மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள்! தலைமையை முடிவு செய்யும் 143 தொகுதிகளில் வெற்றி யாருக்கு?

மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் கடந்த முறை 73 இடங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது பாஜக

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Election 2019 Result Social Reactions, Lok Sabha Election 2019 Result

Lok Sabha Elections Exit polls results : நேற்று மாலை 6 மணியோடு 7ம் மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு ஊடகங்கள் சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக  அறிவிக்கப்பட்டது.

Advertisment

மேலும் படிக்க : 2019 Lok Sabha Election Exit Poll: எக்ஸிட் போல் முடிவுகளின் படி மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

நாட்டிலேயே அதிக அளவு நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது உத்திரப்பிரதேசம் தான். அதனால் தான் உத்திரப்பிரதேசம் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் டிசைட் ஃபேக்டராக இருக்கிறது.

மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் கடந்த முறை 73 இடங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது பாஜக. நேற்று வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜக கணிசமாக 272 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறும் என்று அறிவித்துள்ளது. வெற்றியை நிர்ணயக்கும் அந்த மூன்று மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன?

Lok Sabha Elections Exit polls results, Modi Vs Rahul GandhiLok Sabha Elections Exit polls results, Modi Vs Rahul Gandhi Lok Sabha Elections Exit polls results, Modi Vs Rahul Gandhi

Lok Sabha Elections Exit polls results

உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களின் ஒட்டுமொத்த தொகுதிகளின் கூட்டுத்தொகை 143 ஆகும்.  பிராந்திய கட்சிகளாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் பெறும் வெற்றிகள் என்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கருத்துக் கணிப்பினைப் பொறுத்து வேறுபட்டு வருகிறது.

உத்திரப் பிரதேசத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள்

ரிபப்ள்க் டிவி சிவோட்டரின் கருடத்துக் கணிப்பின் படி பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்டியின் கூட்டணியான மகாகத்பந்தன் உத்திரப் பிரதேசத்தில் 40 தொகுதிகளை வெல்லும் என்றும், பாஜக 38 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதர நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி பாஜக 58 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.

டுடேஸ் சாணக்கியாவின் கருத்துக் கணிப்பு முடிவுகளோ சமாஜ்வாடி கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பாஜக 65 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளது. Aaj Tak-Axis My India நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகளோ பாஜக 62 முதல் 68 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ளது.

மேற்கு வங்கம் கருத்துக் கணிப்பு முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் நேரடியான கடும் மோதல் இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 42 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த மாநிலத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஆஜ்தக் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் அறிவிக்கின்றன. திரிணாமுல் 19 முதல் 22 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் 19 முதல் 23 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெறலாம் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

டுடேஸ் சாணக்கியா ( Today’s Chankaya ) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக 18 இடங்களிலும், திரிணாமுல் 23 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 11 இடங்களிலும் திரிணாமுல் 29 இடங்களிலும் வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த முறை தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்களைத் தான் கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்

2014ம் ஆண்டு ஒடிசாவில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. பிஜூ ஜனதா தளம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றாது. ஆனால் இம்முறை வெளியான கருத்துக் கணிப்பில் பாஜக 15 முதல் 19 இடங்களில் வெற்றி வாகை சூடும் என்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் ஆஜ் தக் சர்வே அறிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் மற்றும் ரிபப்ளிக் சிவோட்டர் நிறுவனங்கள் அளித்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் முறையே பாஜக 12 மற்றும் 10 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ளது. டுடேஸ் சாணக்கியாவின் கருத்துக் கணிப்பு பாஜகவிற்கு 14 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. இம்மூன்று நிறுவனங்கள் பிஜூ ஜனதா தளத்திற்கு முறையே 8,11, மற்றும் 7 சீட்டுகள் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

Narendra Modi Rahul Gandhi General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment