EP Unny
MP Kanimozhi contests against Dr Tamilisai : ஒரு தமிழக கட்சியின் தேசிய முகமும், ஒரு தேசிய கட்சியின் தமிழக முகமும் ஒன்றாக ஒரே நேரத்தில் போட்டியிட்டால் என்னாகும் ? தூத்துக்குடியில் அது தான் நடக்கின்றது. கனிமொழி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இரண்டு முறை ராஜ்ய சபை உறுப்பினர், தூத்துக்குடியில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து போட்டியிடுகிறார்.
கனிமொழி எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தமிழிசை கூறுகிறார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னாலும் கூட, அதிமுகவை எதிர்த்து போட்டியிட ஒரு வலுவான வேட்பாளரை முன்னிறுத்தவில்லை.
கனிமொழி - தனக்கு தேவையானதை தவிர ஒரு வார்த்தை அதிகமாக உங்களிடம் கூறமாட்டார். தன் அப்பாவின் நிழலில் வளர்ந்து, இறுதி வரை தன்னுடைய சகோதரன் பின்னால் நிற்பதை உறுதியான இறுதி முடிவாக கொண்டுள்ளார். தேசத்தை ஆளும் ஒரு கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்றீர்கள்.
உங்களுக்கு இந்த அனுபவம் எப்படி இருக்கின்றது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இங்கு பாஜக மிகப்பெரிய விசயமில்லை என்று கூறியவாறே கட்சித் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றார். பிறகு கோவில் பூசாரிகளிடம் ஆசிர்வாதங்கள் பெற்றுக் கொள்கிறார். பின்பு, அதிமுக தான் இங்கு மிகப் பெரிய விசயம் என்கிறார்.
மேலும் படிக்க : 1 வருடம் இரவு, பகல் பாராமல் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
ஜெயலலிதா இறந்த பின்புமா ?
அவர் ஒரு நல்லத் தலைவர். அவருடைய கட்சி இன்னும் இயங்கிக் கொண்டு தானே இருக்கிறது ? என்று அவர் கூறிய வாக்கியங்கள் மிகவும் தெளிவாக அவருடைய நிலைப்பாட்டை கூறிவிட்டது. ஆனால் அவருடைய கட்சியோ மாநில மற்றும் மத்திய அரசின் கூட்டணியை பார்த்து பயந்துவிடவில்லை என்று கூறுகிறது.
அவருடைய பிரச்சாரக் கூட்டத்தில் இரண்டு கறுப்பு நிற ஆடை அணிந்தவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் திராவிட தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள். தலித் அமைப்பை சேர்ந்தவர்கள். திமுக, தொல்.திருமாவளனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கி இடதுசாரிகள் என பெரிய கூட்டணியை வைத்துள்ளனர்.
தூத்துக்குடியில் தேநீர் கடை நடத்தி வரும் 79 வயது மிக்க இடதுசாரி கட்சி கொள்கைகளை பின்பற்றி வரும் லக்ஷ்மணன் கூறுகையில் நிச்சயம் ஒவ்வொரு சி.பி.ஐ.(எம்.) வாக்குகளையும் கனிமொழிக்காக போட சொல்லுவேன்.
இரண்டு தமிழ் நாளிதழ்கள் மற்றும் ஒற்றை ஆங்கில நாளிதழுடன் இயங்கும் அந்த தேநீர் கடையில் அமர்ந்து கொண்டு அவர் பேசுகையில், பாஜகவிற்கு எதிராக திமுக நிற்பதாக கூறியுள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் தவறினால் நிச்சயம் நான் கனிமொழியிடம் கேள்வி கேட்பேன் என்று அவர் கூறினார். இந்த கூட்டணி வெற்றி பெற்றால், தேர்வு முடிவுகளுக்குப் பின்பு கூட்டணியில் மாற்றத்தைக் கொண்டு வருமா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாகஜ தொண்டர் குமரேசன் கூறுகையில் “1593 வாக்குச் சாவடிகளில் நிலவி வரும் ஜாதி நிலவரம், மதப் பிணைப்பு, என ஒவ்வொன்றைப் பற்றியும் விவாதிக்கிறார். அவருடைய காவிக்கட்சி எப்படி கிறித்துவ சமுதாயம் வரை பரவி உள்ளது என்றும் விவரிக்கும் அவர், தமிழகத்தில் மதத்தினை விட சாதி எப்படி பரந்து விரிந்துள்ளது என்றும் கூறுகிறார். அன்று நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள வந்த தமிழிசையிடம் பேசினோம்.
ஒரு வலிமையான வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவதை எப்படி உணர்கிறீர்கள் ?
நான் அவர்களின் வலிமைக்கு சற்றும் குறைந்தவர் இல்லை. எங்கள் கட்சியும் வலிமைக்கு சற்றும் குறைந்தது இல்லை. கடந்த 20 வருடங்களாக அரசியலில் இருக்கின்றேன். கனிமொழி போன்று எந்த விதமான அரசியல் பின்புலத்திலும் இல்லாமல் சுயமாக இந்த இடத்தை அடைந்துள்ளேன் என்று கூறும் அவரின் தந்தை காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரும் தலைவராக தென் தமிழகத்தில் வலம் வந்தவர் என்பதையும் மறுப்பதிற்கில்லை.