NaMo TV Issue : ஏப்ரல் 5ம் தேதி, டெஹராடூனில், பிரதமர் நரேந்திர மோடி, பொதுக்கூட்டப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சரியாக 30 நிமிடங்களுக்கு முன்பு, “ராணுவ உடையில் இருந்த சிலர், பொக்ரான் என்ற இடத்தில், அணு ஆயுத சோதனை நடத்துகிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்” என்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி ஒளிபரப்பாகிறது.
அந்த 30 நிமிடங்கள் போதுமானதாக இருக்கிறது, இந்த நமோ டிவியின் தேவையும், நோக்கமும் என்ன என்பதை அறிந்திட. முழுக்க முழுக்க பாஜகவின் தேசப்பற்றை பறை சாட்டும் ஒரு சேனலாகவே இருக்கிறது நமோ சேனல்.
இந்த நமோ டிவி எதன் அடிப்படையில் செயல்படுகிறது என்பது மட்டும் இன்று வரை ரகசியமாக இருக்கிறாது. ஆனால் எப்போது வைத்தாலும் அது நரேந்திர மோடியின் புகழ் மட்டுமே பாடுகிறது இந்த சேனல்.
நமோ சேனலில் என்னென்ன ஒளிபரப்பாகிறது ?
பாஜகவின் சொந்த செயலியான நரேந்திர மோடி செயலி, பாஜகவின் லோகோ இரண்டும் இதில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் ஒரு செயலியைத் தாண்டியும் அதிகமாக செயல்படுகிறது இந்த சேனல். சில முக்கியமான தகவல்களையும் தருகிறது இந்த சேனல். ஆனால் என்ன, narendramodi.in - இணையத்திற்கு செல்லுங்கள், அல்லது நமோ செயலியை டவுன்லோடு செய்யுங்கள் என்பதை மட்டும் அந்த சேனல் கூறவில்லை.
இந்த தொலைக்காட்சியின் பாட்டம் டிக்கரில் மோடியின் உரை மற்றும் நேர்காணலில் இடம் பெற்ற முக்கியமான பொன்மொழிகள் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில், இன்று எங்கே, எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் மோடி என்பதையும் நமோ டிவி ஒளிபரப்புகிறது.
நமோ டிவி தற்போது, இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து டி.டி.எச். சேவைகளிலும் இடம் பெற்றுள்ளது. இந்தியா டிவி மற்றும் என்.டி.டி.விக்கும் மத்தியில், ஏர்டெல் டிஜிட்டலில் நமோ டிவியை மக்கள் காண இயலும். ஏர்டெலின் 316 மற்றும் 110 தொலைக்காட்சி எண்ணில் இந்த சேனலை மக்கள் பார்க்கலாம். டாட்டா ஸ்கையில் ஹிந்தி நியூஸ் கேட்டகிரியில் இந்த சேனலை பார்க்கலாம்.
ஐந்தாண்டு சாதனைகள்
இந்த சேனலில் டாய்லெட் ஏக் பிரேம் கதா என்ற ஷோ, மோடியின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தில் வெற்றி பெற்ற திட்டமாக அடிக்கடி ஒளிபரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மீண்டும் மீண்டும், மோடியின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில், மோடியின் சாதனைகளை பட்டியலிடுகிறது நமோ டிவி. விவசாயிகள், பெண்கள், பாதுகாப்பு, டிஜிட்டல் இந்தியா என ஐந்தாண்டு காலங்களில் மோடியின் சாதனைகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது நமோ டிவி.
காலை சரியாக ஏழு மணிக்கு யோகாசனங்கள் செய்வது எப்படி என்பதை ஒளிபரப்புகிறாது. அந்த வீடியோக்களில் சில மோடி ஆசனங்கள் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருந்து அனிமேட் செய்யப்பட்டது. ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தின் உதவி மூலமாக இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டன.
மோடி இதற்கு முன்பு பேசிய பழைய உரைகளையும் ஒளிபரப்பி வருகிறது இந்த சேனல். வெள்ளிக் கிழமையன்று, இரண்டரை மணி நேரங்களுக்கும் மேலாக மெய்ன் பி சௌகிதார் உரையை ஒளிபரப்பினர்.
பின்பு சனிக்கிழமையன்று வாக்குச்சாவடி உறுப்பினர்களுடன் காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற உரைகளையும் ஒளிபரப்பியது இந்த சேனல்.
மேலும் படிக்க : பாஜகவின் 48 பக்க தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.