மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என எக்ஸிட் போல் முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து மோடி, அமித் ஷா அளித்த விருந்தில் தமிழக தலைவர்கள் உற்சாகமாக பங்கேற்றிருக்கிறார்கள். அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் யார், யாருக்கு பதவி என்கிற விவாதமும் களை கட்டியிருக்கிறது.
Advertisment
தேர்தல் முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆகின்ற நிலையில், பாஜக தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கட்சினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று (21-ம் தேதி) டெல்லி அசோகா ஹோட்டலில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்த விருந்தில் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, ஷிரோமணி அகளி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரவு உணவு நேரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களோடு மட்டுமல்லாமல், பாஜக அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தினையும் தலைமை தாங்கி நடத்தினார் அமித் ஷா.
19ம் தேதி வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின் 9ல் ஆறு முடிவுகள் நேரடியாக பாஜக பெரும்பான்மை பெறும் என்று கூறியுள்ளது. ஏ.பி.பி. - நெல்சன், நேட்டா நியூஸ் எக்ஸ் மற்றும் ரிபப்ளிக் சிவோட்டர் போன்ற நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் பாஜக தனித்து அவ்வளவு இடங்களில் வெற்றி பெறாது ஆனால் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 23ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் சந்திப்பினை மேற்கொள்ள உள்ளனர்.
டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணித் தலைவர்களான அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதிமுக அதில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவெடுக்கும் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். எனவே அதிமுக.வில் யார், யாருக்கு அமைச்சர் பதவி? என்கிற விவாதம் கிளம்பியிருக்கிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் முக்கியப் பதவிகளை டெல்லியில் பெறுவது தொடர்பான ஆலொசனைகள் நடக்கின்றன. எனினும் 23-ம் தேதி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே இதில் உறுதியான நிலைப்பாடுகள் தெரியும்.
Live Blog
NDA Leaders Amit Shah Meet
Highlights
20:07 (IST)21 May 2019
மோடி சர்காருக்கு வாழ்த்துகள் - அமித் ஷா
I congratulate Team Modi Sarkar for their hard work and remarkable achievements in the last 5 years.
Let us keep this momentum going for a New India under the leadership of PM @narendramodi.
Sharing pictures of Aabhar Milan of Union Council of Ministers at BJP HQ, New Delhi. pic.twitter.com/X2sgvJjJ5c
விருந்து டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
19:36 (IST)21 May 2019
முதல்வர், துணை முதல்வர் வருகை
டெல்லியில் பாஜக சார்பில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தலைவர்கள் வருகை; தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கின்றனர்.
19:04 (IST)21 May 2019
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
நாளை மறுதினம் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும்
தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்திற்கு பின் மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை தொடங்கும்
மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
18:47 (IST)21 May 2019
மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை தொடங்கியது. பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி அமைச்சர்களும் பங்கேற்பு.
18:12 (IST)21 May 2019
பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்
பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights