தர்மயுத்தம் டு சசிகலா ஆதரவு: போடியில் ஓபிஎஸ் எதிர்கொள்ளும் சவால்கள்

சோதனைகளில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ். – பாஜக கூட்டத்தில் இணைந்தார் என்று கூறப்படுகிறது. அவர்களின் எண்ணங்களை இவர் நிறைவேற்ற துவங்கினார்.

O Panneerselvam: Tamil Nadu’s almost Chief Minister

 Arun Janardhanan

O Panneerselvam: Tamil Nadu’s almost Chief Minister : ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் இருந்து வி.கே.சசிகலாவின் குடும்பமே விலகிவிட்டது. தற்போது தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குறித்து சிறிது பார்ப்போம். குற்றச்சாட்டுகளில் இருந்து விலகுகின்ற சூழல் ஏற்படுகின்ற போதெல்லாம், ஸ்டாப்-கேப் முதல்வராக பணியாற்றினார் ஓ. பன்னீர்செல்வம். ஜெயலலிதாவிற்கு அவர் காட்டிய விசுவாசத்தின் வெகுமதியாக அவர் முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்திருக்கலாம். ஆனால் அது மோசமடையக் கூடும். நான்கு ஆண்டுகளாக துணை முதல்வராக பதவி வகித்த அவர் தற்போது தேனிக்கு அருகே இருக்கும் போடிநாயக்கனூரில் கடுமையான சவாலை சந்தித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு சென்று பிறகு அங்கிருந்து திமுகவிற்கு சென்ற தங்க தமிழ்ச்செல்வன் இவருக்கு எதிராக போடியில் களம் இறங்குகிறார். தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் இல்லாமல், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, பாஜகவுடனான கூட்டணி, சமீபத்தில் வன்னியர்களுக்கு ஓ.பி.சி. யில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது குறித்து தேவர் சமூகத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் வருத்தம், ஜெயலலிதாவின் மரணத்திற்கு அவர் நடந்து கொண்ட விதம் என அனைத்து சவால்களையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க : ஜெ, அழகிரி, சசிகலா ; மனம் திறக்கும் உதயகுமார்

தேவர்கள் மட்டும் அல்லாமல், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக கவுண்டர்கள் உட்பட மற்ற ஓ.பி.சி. பிரிவினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் இருவரும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். எடப்பாடி பழனிசாமி கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். அதிமுக கூட்டணியில் வன்னியர்களின் செல்வாக்கை பெற்ற பாமகவே நிலை நிறுத்திக் கொள்ளவே இந்த அறிவிப்பை வெளியிட்டதாக நம்பப்படுகிறது. எனவே வாக்காளர்களிடம் பன்னீர் செல்வம் இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பிறகு இது மாற்றி அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஒரு போதும் சசிகலாவை குற்றம் சுமத்தவில்லை என்று கூறுகிறார் ஓ.பி.எஸ். சசிகலா அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது மற்றும் தேர்தலில் இருந்து வெளியேறியது தேவர்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை சசிகலா மீது ஏற்படுத்தியுள்ளது. ”ஜெயலலிதாவிற்காக நான்கு ஆண்டுகள் சிறைவாசம் சென்றார்” என்று போடியை பூர்வீகமாக கொண்ட, வேலை தேடும் பொறியியல் பட்டதாரி கூறுகிறார்.

மூத்த அதிமுக உறுப்பினர், தேவர் சமூகத்தினரிடையே நம்பிக்கையை உருவாக்க பன்னீர்செல்வம் போராடி வருகிறார் என்று ஒப்புக் கொண்டார். சசிகலா அப்பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை 1991ம் ஆண்டு முதல் மாநில அமைச்சரவையில் இருந்து காவல்துறை, அரசு வேலை வாய்ப்புகள் வரை உறுதி செய்தார். மக்கள் சசிகலாவை ஏமாற்றியவராக பன்னீர்செல்வத்தை காண்கின்றனர் என்று அவர் கூறினார்.

திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன், இப்பகுதியில் வெகு ஆண்டுகளாக அதிமுகவில் இருக்கும் குடும்ப உறுப்பினராவார். பன்னீர் செல்வம் தனக்காகவே வேலை செய்தார் என்று அவர் கூறினார். பிரச்சார அலுவலகத்தில் பேசிய அவர், அவருடைய மகன் 2019ம் ஆண்டு அதிக பணத்தை செலவழித்து எம்.பீ. ஆனார். ஆனால் பன்னீர் செல்வம் மக்களின் பிரச்சனைகள் குறித்து அலட்சியமாகவே இருக்கிறார். இப்பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, சாக்கடை வடிகால் வசதி மற்றும் சாலைகள் இல்லாத பகுதிகள் உள்ளன என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : நந்திகிராம் தேர்தல் : பாஜவை குற்றம் சுமத்தும் மமதா; தோல்வி பயத்தால் பேகிறார் என பாஜக பதில்

பன்னீர் செல்வம் தன்னுடைய அரசியல் பயணத்தை பெரியகுளம் நகராட்சியின் தலைவராக துவங்கினார். அங்கு போட்டியிட்ட, சசிகலாவின் அக்கா மகனான டி.டி.வி. தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அங்கு வந்து செல்லும் போதெல்லாம் டி.டி.வி தினகரன், பன்னீர்செல்வத்தின் வீட்டில் தங்குவது வழக்கம். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

விரைவில், ஒரு வழக்கில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலக நேர்ந்த போது, 6 மாதங்கள் பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக செயல்பட்டார். அப்போது தான் மக்கள் முதன்முறையாக பன்னீர் செல்வத்தின் பெயரை அறிந்திருந்தால், அப்போது இருந்து தான் அரசியல் அதிகார வட்டத்தில் மிக முக்கிய நபராக இருந்து வர ஆரம்பித்தார். 2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு பன்னீர் செல்வத்தை அவர் மீண்டும் தேர்வு செய்தார். அப்போது ஆவர் 8 மாதங்கள் முதல்வராக பதவி வகித்தார்.

ஜெயலலிதா பின்னர் பன்னீர்செல்வத்தை “ஒரு சச்சரவு இல்லாமல் அதிகாரத்தை திருப்பித் தரும் அரிய தலைவர்” என்று புகழ்ந்தார். தாராள மனப்பான்மையைக் கொண்ட தலைவரே தாராள மனப்பான்மையை ஏற்றுக்கொள்வார், நகராட்சித் தலைவராவதே தனது மிகப்பெரிய கனவு என்று கூறினார்.

ஜெயலலிதா இறந்த பிறகு போராட்டக்காரர்கள் மாறுவார் என்று எதிர்பார்க்கவே படாத நபராக இருந்தார் பன்னீர்செல்வம். அவர் வெகுவிரைவில் முதல்வர் ஆக்கப்பட்டார். மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் சேகர் ரெட்டி வீட்டில் நடத்திய சோதனைகளில் பன்னீர்செல்வத்துக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்தன. இது எல்லாவற்றையும் மாற்றியது. பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக மாறி தர்மயுத்தம் செய்தார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட குருமூர்த்தி பின்பு பன்னீர்செல்வம் என்னுடைய ஆலோசனையின் பெயரிலேயே செயல்பட்டார் என்று கூறினார். அவர் ஒரு ஆணாக இருந்தால் ஜெயலலிதாவின் சமாதி முன்பு அமரட்டும். அவருக்கு ஏதாவது யோசனை கிட்டும் என்று கூறியதாக கூறப்பட்டது.

மத்திய புலனாய்வு முகமைகளின் சோதனைகளில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ். – பாஜக கூட்டத்தில் இணைந்தார் என்று கூறப்படுகிறது. அவர்களின் எண்ணங்களை இவர் நிறைவேற்ற துவங்கினார். அவரை பணிய சொன்னால் அவர் தவழ்ந்து செல்லவே துவங்கிவிட்டார் என்று முன்னாள் அதிமுக எம்.பி. ஒருவர் கூறினார்.

பின்னர், 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் மற்றொரு சசிகலா விசுவாசியான பழனிசாமியிடம் பன்னீர்செல்வம் தோற்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் சசிகலாவுக்கு எதிராக அவருடன் கைகோர்த்தார். இறுதியில் அவருக்கு ஆதரவாக இருந்த மற்று எம்.எல்.ஏ.க்களையும் பழனிசாமியிடம் இழந்தார்.

பன்னீர்செல்வத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த அந்த வழக்கு என்ன ஆனது? பணமதிப்பிழக்க நீக்கத்திற்கு பிறகு சோதனையின் போது 33.89 கோடி ரூபாய் பணம் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பெறப்பட்டது. புதிதாக வெளியான ரூ. 2000 தாள்களை கொண்டிருந்தது. சி.பி.ஐ. இந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை செய்தது. எதுவும் கண்டறியப்படவில்லை என்று கூறிய சி.பி.ஐ. அந்த வழக்கை முடித்து வைத்தது. இதில் மேலும் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், பாஜக சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் இணைக்க முடிவு செய்தது. இதற்கு பன்னீர் செல்வம் ஆதரவாக இருந்தார். அவருடைய மகன் ஜெயப்ரதீப் சசிகலாவை வாழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: O panneerselvam tamil nadus almost chief minister

Next Story
நந்திகிராம் தேர்தல் : பாஜவை குற்றம் சுமத்தும் மமதா; தோல்வி பயத்தால் பேசுகிறார் என பாஜக பதில்Mamata Banerjee, Assembly elections 2021, West bengal, Nandigram, Nandigram boils over: Mamata Banerjee cries foul
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express