Advertisment

யோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்

இஸ்லாமியர்கள் மற்றும் தலித் சமூகத்தினரின் பாதுகாப்பினை உறுதி செய்வதை நாங்கள் முக்கியம் என்று நினைக்கின்றோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
P S S Ali Shihab Thangal, IUML Leader

P S S Ali Shihab Thangal, IUML Leader

Shaju Philip

Advertisment

P S S Ali Shihab Thangal, IUML Leader : கேரள காங்கிரஸூடன் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி. ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட இருப்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் முஸ்லீம் லீக் கட்சி அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. அதே போல், பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

பாஜக தேசிய தலைவர் சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, வயநாட்டினை பாகிஸ்தானோடு ஒப்பிட்டு பேசினார். அது குறித்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் அலி சாகிப் தங்கல் பேசுகையில், ஊர்வலம் என்ற ஒன்றை எடுத்துவிட்டு பேசினால் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று எவராலும் கண்டறிய இயலாது.

P S S Ali Shihab Thangal, IUML Leader - இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி

ஏப்ரல் 4ம் தேதி, ராகுல் காந்தி வயநாட்டில்வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த போது முஸ்லீம் லீக் கட்சியின் கொடிகள் அதிகமாக இருந்ததை பார்த்து இவ்வாறாக அமித் ஷா பேசியதிற்கு பதில் அளித்துள்ளார் பி.எஸ்.எஸ். சலி சாஹிப் தங்கல். இவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சார்பில், வயநாட்டில் தேர்தல் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச முதல்வர் இந்திய யூனியன் மிஸ்லீம் லீகை “காங்கிரஸை தாக்கிய வைரஸ்” என்று குறிப்பிட்டதைப் பற்றி அலி சாகிப்பின் பதில்

முஸ்லீம் லீக் பற்றி அவருக்கு எதுவும் தெரியாததால் அப்படி பேசுகிறார். வைரஸ் தான் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் தான் வளரும். முஸ்லீம் லீக் என்பது மதசார்பற்ற தன்மையின் அடிப்படை. அதில் வைரஸ் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. யோகியின் கடந்த காலம் பற்றி தெரியுமா? முதல்வராக வருவதற்கு முன்பு அவருடைய செயல்பாடுகள் மதிக்கக்கூடியதாகவா இருந்தது. அவருடைய கருத்து, அவருடைய கடந்த காலத்தையே நினைவு கூறுகிறது.

முஸ்லீம் லீக்கின் செயல்பாடுகள் அனைத்தும் திறந்த புத்தகம் போல் அனைவரும் அறியும் வகையில் தான் உள்ளது. இங்கு சாதி மதம் கடந்து அனைவருக்கும் தேவையான உதவிகளை நாங்கள் செய்து வருகின்றோம். எங்களின் வளர்ச்சி வட இந்தியாவிலும் கண்கூட காண இயலும். உத்திரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நாங்கள் உதவிகள் செய்து, ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட என்ன காரணம் ?

உங்களின் கட்சி பற்றி நிறைய தவறான கருத்துகள் இருப்பதாக நினைக்கின்றீர்களா ?

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் நாங்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக இருந்துள்ளோம். அதே போல், இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியினருடன் இணைந்தும் 1967ம் ஆண்டு பணியாற்றியுள்ளோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடும் போது, இந்த தொகுதியில் எங்களின் பலம் என்னவென்று தேசத் தலைவர்கள் உணர துவங்கியிருப்பார்கள். யோகி போன்ற தலைவர்வகள் எங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்கின்றனர்.

பாஜகவின் விமர்சனத்தை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் ?

நரேந்திர மோடி, வாஜ்பாயின் ஆட்சியை பார்க்க வேண்டும். வாஜ்பாய் அவர்களின் ஆட்சி காலத்தில் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி. ஈ. அகமது அவரை ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய பிரதிநிதியாக அமர்த்தினார். பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அகமது பங்கேற்றார். ஆனால் மோடியோ இன்றைய ஆட்சியில் பிரித்தாளும் மாண்பை எங்கள் கட்சியின் மீது காட்டுகிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்திலும் கூட, முஸ்லீம் லீக் கட்சியானது, மதசார்பற்ற தன்மையை தான் விரும்பியது. கேரளாவில் எந்த கோவிலுக்கும் சேதங்கள் விளையக்கூடாது என்பதை திட்டவட்டமாக அறிவித்தார் அன்றைய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி சாஹிப் தங்கல். எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள், சபரிமலைக்கு தரிசனம் வந்தவர்களை மிகவும் பத்திரமாக கொண்டு கோவிலுக்கு அழைத்து சென்றோம்.

பாஜகவின் விமர்சனத்திற்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தில் கொடிகள் மற்றும் லீக் கட்சியினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா ?

நிச்சயமாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ளது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதனால் வயநாட்டில் எங்கள் கட்சியின் கொடி மிக உயரத்தில் பறக்கவிடப்படும். எங்களின் கொடியும் கட்சி உறுப்பினரும் மிக அதிக அளவில் காணப்படுவார்கள்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சியினரை, ராகுல் காந்தி உட்பட வெற்றி பெற வைக்கும் முக்கிய பொறுப்பு உங்களுடையது என்று நினைக்கின்றீர்களா?

காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலம் முழுவதும் பரவி உள்ளது. மதசார்பற்ற தன்மையே அதன் நோக்கம். மேலும் புதிதாக வந்துள்ள அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியால் மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதை நாங்கள் தேசப்பற்றுடனான பொறுப்பாக உணருகின்றோம்.

கேரள இஸ்லாமியர்களின் முக்கிய தேவை என்ன என்று நினைக்கின்றீர்கள் ?

எங்களின் தேவையை நாங்கள் கேரளாவிற்குள் என்று சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைகளில் இஸ்லாமியர்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் மற்றும் தலித் சமூகத்தினரின் பாதுகாப்பினை உறுதி செய்வதை நாங்கள் முக்கியம் என்று நினைக்கின்றோம். இவை அனைத்திற்கும் நிரந்தர தீர்வு மதசார்பற்ற ஆட்சி மற்றும் தான்.

பாஜகவை எதிர்த்து கேரளாவில் சிபிஎம்மின் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணி போட்டியிடுகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதில் மிக தீவிரமாக இருக்கின்றார்கள். இதில் எந்த கூட்டணிக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் சென்று சேரும்?

சி.பி.எம். கட்சியினர் நிச்சயமாக இஸ்லாமியர்களின் வாக்குகளை சேகரிப்பதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆனால் பாஜகவை எதிர்த்து போட்டியிட போதுமான திட்டங்களை கையில் கொண்டிருக்கவில்லை சி.பி.எம். பாஜகவை எதிர்க்க வேண்டுமெனில், காங்கிரஸ் கட்சியுடன் அவர்கள் கூட்டணி தான் வைக்க வேண்டும். கேரளாவில் அதிக இடங்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றாலும், பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க அது போதாது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றாலும் உங்களின் கூட்டணி தொடருமா ?

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து மதசார்பற்ற கட்சிக்கு தங்களின் ஆதரவை அளித்து வரும். பாசிசத்திற்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். பாசிசத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்குமானால் நாங்கள் நிச்சயமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

Kerala General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment