Lok Sabha Election 2019: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
17வது மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது. மே 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
March 2019
March 2019
தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோருக்கு ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க - DMK Alliance Seat Sharing Live Updates: தமிழக தேர்தல் களம் லைவ் அப்டேட்ஸ்
மேலும் சினிமா பிரபலங்கள், பத்திரிக்கைத்துறை, விளையாட்டு வீரர்கள், சாதனை படைத்த வீரர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க செய்யுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.