Pressure Cooker symbol : தேர்தல் நடைபெற இருப்பதால், சின்னங்கள், கூட்டணிகள், வேட்பாளர்கள் பட்டியல் என முழு வீச்சில் பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. சின்னங்கள் தொடர்பாக அடிக்கடி கட்சிகளுக்குள் பெரும் குழப்பம் நிலவி வருகிறது என்பது மறுக்க இயலாது. டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு சின்னம் வழங்குவதில் தொடர் இழுபறி நிலவி வந்த நிலையில், குக்கர் சின்னத்தை வழங்க இயலாது என ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
குக்கர் சின்னம்
ஆர்.கே.நகர் தொகுதியில், இந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் இதே சின்னம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் டிடிவி தினகரன். ஆனால் 4 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் இதற்கு முடிவு எடுக்க வேண்டும் என ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அறிவித்தது.
இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், தேர்தல் ஆணையம் சார்பில் ”பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு மட்டுமே பொதுச்சின்னம் வழங்கப்படும். அமமுக கட்சியே பதிவு செய்யப்படாத நிலையில் குக்கர் சின்னம் வழங்க இயலாது என்று கூறிவிட்டனர்.
அடுத்தக்கட்ட விசாரணை நாளை நடைபெறுகிறது. கட்சிகளுக்கு சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுகிறது என்று ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : வைரல் வீடியோ : தாண்டியா ஆட்டம் ஆடி வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ…