Tamil Nadu Assembly By Election 2019 Polling: தமிழகத்தில் மொத்தம் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிளில், 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், மீதம் உள்ள ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் இன்று(மே.19) வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேலும் படிக்க - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? அது நம்பகமானதா?
Live Blog
Tamil Nadu By Election 2019 Polling Live Updates: நான்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு
அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுவதாக திமுக மீது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Sathyapiratha Sahu Live https://t.co/60t0UTlUBb
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 19 May 2019
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்காளர்களுக்கு டோக்கன் மூலம் பணம் விநியோகம் செய்வதாக அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் குற்றம்சாட்டியுள்ளார். டோக்கன் கொடுக்கிறார் செந்தில் பாலாஜி - செந்தில் நாதன்
டோக்கன் கொடுக்கிறார் செந்தில் பாலாஜி - செந்தில் நாதன் #AIADMK | #Senthilnathan | #SenthilBalaji | #DMK pic.twitter.com/kGYh4i7SGH
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பேருந்துகளை நிறுத்தி போலீசார் விசாரணை; பேருந்துகளில் வந்த பயணிகளிடம் வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை
#ByPoll updates https://t.co/b0954GUvHW
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 19 May 2019
அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். அரவக்குறிச்சியில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் நடந்துக் கொள்வதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறை ஒருதலைப்பட்சமாகவும், ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் செயல்படுகிறது - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி#Aravakurichi | #SenthilBalaji | #DMK pic.twitter.com/LMSdvG72Ka
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
சொந்த ஊரான அரவக்குறிச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்களித்தார்.
வாக்களிப்போம்! ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்! #அரவக்குறிச்சி_இடைத்தேர்தல் pic.twitter.com/Ja69BGdK2V
— Jothimani (@jothims) 19 May 2019
சூலூர் தொகுதி கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது.
#ByPoll Updates https://t.co/lg5hSHI1dp
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 19 May 2019
இடைச்செருகலாக ஒரு செய்தி!!
உத்தர பிரதேச மாநிலம் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
உ.பி.: சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக பிரச்னை; பாஜகவை சேர்ந்த 3பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் #LokSabhaElections2019 pic.twitter.com/LCu515RCLG
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 19 May 2019
திருப்பரங்குன்றம் தொகுதியில், கடந்த 3 ஆண்டுகளில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் பள்ளிக்கூடங்களில் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சியில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு, இதுவரை எந்தவித பதட்டமும் தாமதமும் இன்றி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இங்கு, 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 99 ஆயிரத்து 52 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 219 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
சூலூரில் கருத்தாம்பட்டி வாக்குச்சாவடி தவிர்த்து, மற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது.
சூலூரில் மொத்தம் 324 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், 130 பதற்றமான வாக்குச்சாவடிகள். மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர் பெண்கள், 18 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு, அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
1 லட்சத்து 15 ஆயிரத்து 80 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்கள், 16 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு உட்பட்ட 116வது வாக்குச்சாவடியான கருத்தாம்பட்டியில், வாக்கு இயந்திரத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளி மக்கள் கட்சி சின்னத்திற்கு நேரே உள்ள பட்டன்கள் வேலை செய்யாததால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சூலூர் தொகுதிக்கு உட்பட்ட கருமத்தாம்பட்டியில் உள்ள 116-வது வாக்குச்சாவடியில் இயந்திர பழுதால் வாக்குப்பதிவு துவங்கவில்லை.#Sulur | #Voting | #Byelections | #TNByelections pic.twitter.com/JIKTh9L2op
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights