Advertisment

கோட்டை யாருக்கு? தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இங்கே!

திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெறும் என்று அறிவித்துள்ளது விகடனின் சர்வே.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Assembly Elections Thanthi, Vikatan, Malai Murasu Opinion poll results

Tamil Nadu Assembly Elections Thanthi, Vikatan, Malai Murasu Opinion poll Results : ஜூனியர் விகடன் 468 தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்களைக் கொண்டு 234 தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்களர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.

Advertisment

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா என்று எழுப்பிய கேள்விக்கு 70.89% மக்கள் ஆம், ஆட்சி மாற்றம் தேவை என்று கூறியுள்ளனர். அதே போன்று ஆட்சி மாற்றம் தேவை இல்லை என்று 29.11% நபர்கள் கூறியுள்ளனர்.

எதிர்கால தமிழக அரசியலில், யார் முக்கியமான தலைவராக இருப்பார் என்று எழுப்பிய கேள்விக்கு முக ஸ்டாலினுக்கு 43.12% பேர் ஆதரவு தந்துள்ளனர். 29.20% எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர். சீமானை 8.18% பேரும், கமல் ஹாசனை 7.1% பேரும், டி.டி.வி. தினகரனை 6.67% பேரும் ஆதரித்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்று எழுப்பிய கேள்விக்கு 45.09% பேர் முக ஸ்டாலின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு 30.11% பேரும், டிடிவி தினகரனுக்கு 8.96% பேரும், சீமானுக்கு 8.71% பேரும், கமலுக்கு 7.13% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெறும் என்று அறிவித்துள்ளது விகடனின் சர்வே. அதிமுகவிற்கு 52 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறிய அந்த கணக்கெடுப்பு முடிவுகளில் அமமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்றும் அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு 1 இடமும், நாம் தமிழர் கட்சிக்கு 0 இடங்களும், 18 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தந்தியின் கருத்துக்கணிப்பு (30/03/2021)

ஏற்கனவே 29ம் தேதி 50 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டது தந்தி டிவி. இந்நிலையில் நேற்று மேலும் 50 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் 31 இடங்களில் திமுகவும், 7 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், மா.கம்யூனிஸ், ஐ.யூ.எம்.எல்., ம.ம.க., த.வா.க. கட்சி தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 42 இடங்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

திமுக பெரம்பலூர், சிவகங்கையில் உள்ள திருப்பத்தூர், ராமநாதபுரம், மானாமதுரை, விருதுநகர், பழனி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, நாங்குநேரி, மயிலாடுதுறை, திருவாடானை, காரைக்குடி தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர், மனித நேய மக்கள் கட்சி பாபநாசம், ஐ.யூ. எம்.எல். கடையநல்லூர், தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டி தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வாய்ப்புகள் இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அறிவிக்கின்றன.

அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு தொகுதிகளாக பரமக்குடி, திருமங்கலம், விராலிமலை, நத்தம் மற்றும் விருதாச்சலம் (பாமக) அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் போட்டி நிலவும் தொகுதிகளாக நன்னிலம், வேதாரண்யம் மற்றும் சிவகங்கை இருந்து வருகிறது.

மேலும் படிக்க : தந்தியின் முதற்கட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்; முதல் 50 தொகுதியில் வெற்றி யாருக்கு?

மாலை முரசு

கடந்த 6 நாட்களுக்கும் மேலாக மண்டலம் வாரியாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது மாலை முரசு தொலைக்காட்சி. ஏற்கனவே தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று 26 தொகுதிகளுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. இதுவரை மொத்தமாக 156 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது அந்த தொலைக்காட்சி.

அதில் 97 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளும், 37 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகளும் முன்னிடம் வகிக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் 21 இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கூறியுள்ளது அந்த தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு முடிவுகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment