2019 மக்களவைத் தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. திருநாவுக்கரசர், வசந்தகுமார், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெயர்கள் இடம்பெற்றன.
2019 மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் பிரதானக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் செய்தது.
Read More: கார்த்தி சிதம்பரத்திற்கு டிக்கெட்? சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் பின்னணி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3 நாட்களுக்கு முன்பே பிரசாரம் தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை உடனடியாக அறிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டு ‘சீட்’டுக்காக மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
நேற்று மாலை சோனியா இல்லத்தில் இறுதிகட்ட ஆலோசனை நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘நாளை (அதாவது, இன்று) வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’ என தெரிவித்தார்.
Read More: திடீர் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தேனியில் யார் ‘கை’ ஓங்கும்?
ஆனால் நேற்று நள்ளிரவிலேயே வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் வெளியிட்டார். அதன்படி திருவள்ளூர் (தனி) தொகுதி- டாக்டர் ஜெயக்குமார், ஆரணி - டாக்டர் விஷ்ணுபிரசாத், கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், தேனி - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கரூர்- ஜோதிமணி, கன்னியாகுமரி- ஹெச்.வசந்தகுமார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/03/tn-congress-list............-300x150.jpg)
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றபோது கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். இந்த முறையும் அவருக்கே மாநிலக் கமிட்டி பரிந்துரை செய்ததாக தெரிகிறது. ஆனால் மேலிடம் இதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை.