திருநாவுக்கரசரை கைவிடாத திருச்சி மக்கள்! 4 லட்சம் வாக்கு வித்யாசத்தில் இமாலய வெற்றி!

தேர்தல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu Lok Sabha Election 2019 star candidates results நாட்டின் தலையெழுத்தை நிர்வகிக்கும் நாள் இன்று. மத்தியில் ஆட்சியை பிடிக்க போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் தலைவர்களிடம் மட்டுமில்லை சாமானிய மக்களிடமும் அதிகரித்துள்ளது. 7 கட்டங்களாக நடைப்பெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகின

தமிழகத்தை பொருத்தவரையில் 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. கூடவே, தமிழக ஆட்சியை தீர்மானிக்கும் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின.வெளிவந்திருக்கும் தேர்தல் முடிவுகளால தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சி தலைவர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகுது? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு  கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்துக் கொண்டே வருகிறது

மேலும் படிக்க…Tamil Nadu Assembly By Election 2019 Results Live

இதிலும் குறிப்பாக தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்களுக்கு இடையே இருக்கும் வெற்றி மோதல் முடிவுகள் அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. கவுரப்பிரச்சனையாக பார்க்கப்படும் வெற்றி தோல்விக்கு இன்று விடை கிடைத்து விட்டது தமிழக நட்சத்திர வேட்பாளர்கள் யார்? யார்? இன்று அவர்களின் தேர்தல் முடிவுகள் என்னென்ன? என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க.. Lok Sabha Election Results Tamil Nadu 2019 Live

1. ரவீந்திரநாத் :

தேனி பாராளுமன்ற தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்படும் அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் முடிவுகள். இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ரவீந்திர நாத் வெறும் 6000 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

3  ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர்  ரவீந்திரநாத் குமார்  49,059 பெற்று முன்னிலையில் உள்ளார்.

2. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்:

தேனியில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார்.  3 ஆவது சுற்று முடிவில்  இளங்கோவன் 40,524  வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

3. கனிமொழி :

திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடியில் முதன்முறையாக களம் கண்டுள்ளார். தூத்துக்குடியில் வெற்றி வாய்ப்பு கனிமொழி பக்கம் . தூத்துக்குடி தொகுதியில் 30,424 வாக்குகளுடன்  கனிமொழி  முன்னிலையில் இருக்கிறார். 41 ஆயிரம் வாக்குகள் பெற்று கனிமொழி முன்னிலை.

3. தமிழிசை சவுந்தரராஜன் :

அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரின் தேர்தல் முடிவுகளும் இன்னும் சற்றும் நேரத்தில் வெளியாகிறது.

மேலும் படிக்க..Loksabha election results 2019 live updates

4. எச் ராஜா :

சர்ச்சைகளுக்கும், பரபரப்பு கருத்துக்கும் பெயர் போன எச். ராஜா சிவகங்கையில் களம் இறக்கப்பட்டார். சிவகங்கை மக்கள் எச். ராஜாவுக்கு கைக் கொடுத்தார்களா? என்பது இன்னும் சற்றும் நேரத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

read more… Lok Sabha Election 2019 Result Social Response Live

5. கார்த்தி சிதம்பரம் :

எச் ராஜாவுக்கு போட்டியாக அடுத்த சர்ச்சை நாயகன் என அழைக்கப்படும் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் கண்டுள்ளார். இவரின் தேர்தல் முடிவுகள..


6. தயாநிதி மாறன் :

மத்திய சென்னையில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேட்பாளராக களம் கண்டார். மத்திய சென்னை தொகுதியில் கடந்த கால தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இன்று வரலாறு திரும்பியுள்ளது.  மத்திய சென்னை தொகுதியில்  தயாநிதிமாறன் வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சாம்பாலை 3 லட்சத்து 437 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார், தயாநிதி மாறன்.

திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 29577 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

7. ஜோதிமணி:

கரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி களம் இறக்கப்பட்டார். ஜோதிமணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பலன் கிடைக்குமா?

ஜோதிமணி 19 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

8. அன்புமணி ராமதாஸ்:

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி தான் இங்கு நட்சத்திர வேட்பாளர்.   அன்புமணிக்கு தர்ம்பபுரி மக்கள் கைக்கொடுத்தார்களா?

7 ஆவது சுற்று முடிவிலும் அன்புமணி ராமதாஸ் 21 ஆயிரம் வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். தருமபுரி தொகுதியில் அன்புமணிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

9. ஆ. ராசா வெற்றி :

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா களம் நீலகிரியில் இன்று களம் இறக்கப்பட்டார் நீலகிரியில் ஆ.ராசா முன்னிலையில் இருந்தார்.  இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 5,47,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

10. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கன்னியாகுமரி தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள பொன். ராதா கிருஷ்ணன் பெரும் பின்னடைவு.

11. வசந்தகுமார்:

பொன். ராதாகிருஷ்ணன் போட்டியாக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வசந்தகுமார் சென்ற முறை தேர்தலில் 2 ஆவது இடம் பிடித்திருந்தார். இந்நிலையின் இந்த முறை அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா? என்பதை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

12. தமிழச்சி தங்கபாண்டியன்:

தென் சென்னை தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் தேர்தல் நிலவரம்.. முன்னிலையில் இருப்பதாக தகவல்.

13. திருமாவளவன் :

திமுக- வுடன் கூட்டணி வைத்துள்ள விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் களம் இறக்கப்பட்டார். அவர் முன்னிலையில் இருப்பதாக தகவல்.

14. திருநாவுக்கரசர் வெற்றி:

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் திருநாவுக்கரசர் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். காலை முதல் திருநாவுக்கரசர் தொடர்ந்து 18 ஆயிரம் முன்னிலை பெற்றிருந்தார்.

இந்நிலையில், திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசர் 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

15. பாரிவேந்தர்  வெற்றி :

பெரம்பலூர் தொகுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்  வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.இங்கு பாரிவேந்தர் காலை முதலே முன்னிலையில் இருந்தார் . சுமார் 3 லட்சம் வாக்கு வித்யாசத்தில் பாரிவேந்தர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

16. டி. ஆர் பாலு:

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு களம் இறக்கப்பட்டார். இவர் தற்போது முன்னிலையில் இருப்பதாக தகவல். 20 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் டி. ஆர் பாலு முன்னிலை.

 

பிரபலங்கள் பின்னடைவு:

1. கரூர் தொகுதியில் அதிமுக எம்பி  தம்பித்துரை 4,806  வாக்குகள் மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.  முதல் சுற்றில் தம்பித்துரை வெறும் 4000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

2. சொந்த தொகுதியில் களம் இறங்கிய நடிகர் மற்றும் கவிஞர் சினேகன்  பின்னடைவை சந்தித்துள்ளார்.

3. தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெரும் பின்னடைவு.

4. தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் ஒரு இடங்களில் கூட பாஜக முன்னிலை வகிக்கவில்லை.பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட நட்சத்திர வேட்பாளரான தமிழிசை, எச் ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன் என பாஜக வேட்பாளர்கள் யாருமே 3 சுற்று முடிவில் ஒரு இடங்களில் கூட முன்னிலை இல்லை.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close