Tamil Nadu local body elections : உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 6ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் வரவேற்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 13ம் தேதி. மனுக்கள் டிசம்பர் 16ம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் டிசம்பர் 18ம் தேதி ஆகும். முதற்கட்ட ஓட்டுப்பதிவு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. 2ம் கட்ட ஓட்டுப்பதிவு டிசம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது. மேயர்களுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெறுகின்ற நிலையில் உள்ளாட்சி தேர்தல்கள் மட்டும் 2 கட்டங்களாக நடைபெறுவது வேடிக்கையாக உள்ளது என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று திமுக தலைவர் அறிவித்துள்ளார். மக்களின் பேராதரவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் மாபெரும் வெற்றியை பெறுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
கடம்பூர் ராஜூ
உள்ளாட்சி தேர்தலை 2 பிரிவுகளாக நடத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் அனுமதி அளிக்கிறது. அதன் அடிப்படையில் தான் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
துரைமுருகன்
நகர்புற பகுதிகளுக்கும் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்க வேண்டும். ஊரக பகுதிகளில் மட்டும் தனியே தேர்தல் நடத்துதல் என்பது முறைக்கேடு நடைபெறுவதற்கு வழி வகுக்கும் என்று துரை முருகன் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தல் தேதிகள் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி