/tamil-ie/media/media_files/uploads/2018/01/modi-ramnath-govind..jpg)
Lok Sabha Election Results updates
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்வு, காங்கிரஸ் செயற்குழு கூட்டம். அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம், காங்கிரஸ் தோல்வியடையவில்லை - கே.எஸ். அழகிரி கருத்து, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் வெளியீடு உள்ளிட்ட இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.
Live Blog
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்வு, காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது. அறிவாயலத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் உள்ளிட்ட இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. என்டிஏ கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அமித் ஷா வழங்கினார். வரும் 30ம் தேதி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி.
டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. என்டிஏ கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அமித் ஷா வழங்கினார். வரும் 30ம் தேதி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி.
புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம்
யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்
- நரேந்திர மோடி #NarendraModi#BJPpic.twitter.com/VcVZnUOOYX
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 25 May 2019
சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டதாக ANI செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்திக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா, ராகுல் ராஜினாமா என்ற செய்தியில் உண்மையில்லை. கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கும் பொருட்டு, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் துவங்கியது. இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை.
டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights