குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

மோடி பிரதமராக மீண்டும் இன்று தேர்வு, ராகுலின் தலைவர் பதவி தப்புமா, ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி? ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்வு, காங்கிரஸ் செயற்குழு கூட்டம். அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம், காங்கிரஸ் தோல்வியடையவில்லை – கே.எஸ். அழகிரி கருத்து, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் வெளியீடு உள்ளிட்ட இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.

Live Blog

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்வு, காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது. அறிவாயலத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் உள்ளிட்ட இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.

21:04 (IST)25 May 2019
ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. என்டிஏ கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அமித் ஷா வழங்கினார். வரும் 30ம் தேதி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி.

21:04 (IST)25 May 2019
ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. என்டிஏ கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அமித் ஷா வழங்கினார். வரும் 30ம் தேதி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி.

20:06 (IST)25 May 2019
ரசிகர்களால் கமலுக்கு வாக்கு

கமல்ஹாசனுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் அவருடைய ரசிகர்கள் கூட்டத்தால் கிடைத்தது; அவருடைய கட்சியின் கொள்கைக்காக கிடைத்தது அல்ல - க.பொன்முடி

 
19:36 (IST)25 May 2019
ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டால்...

ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அ.தி.மு.க ஆட்சி கவிழும் - அ.ம.மு.கவின் வெற்றிவேல்

19:33 (IST)25 May 2019
'கடமையை நிறைவேற்றத் தயார்' - பிரதமர் மோடி
19:29 (IST)25 May 2019
அமமுக நிர்வாகிகள் கூட்டம்

சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:40 (IST)25 May 2019
திமுக எம்.பி.க்களின் கூட்டம்

மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக எம்.பி.க்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது; திமுக நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி ஆலோசனை.

17:22 (IST)25 May 2019
பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்

டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது; அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது பற்றி விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்பு.

16:47 (IST)25 May 2019
டிடிவி செய்தியாளர்கள் சந்திப்பு

நாளை காலை 10 மணிக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

16:23 (IST)25 May 2019
'ராகுல் முடிவை நிராகரித்தோம்' - காங்கிரஸ்

ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்; ஆனால் ராகுல் காந்தியின் முடிவை காங். காரிய கமிட்டி ஒருமனதாக நிராகரித்தது - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

15:28 (IST)25 May 2019
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15:13 (IST)25 May 2019
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் மோடி

மத்தியில் ஆட்சி அமைக்க கோருவது தொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி இன்று (25ம் தேதி) இரவு 8 மணிக்கு சந்தித்து பேச உள்ளார்.

14:38 (IST)25 May 2019
ஜனாதிபதியுடன் தலைமை தேர்தல் ஆணையர் சந்திப்பு

டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சந்தித்துப் பேசினார்.  மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை, சுனில் அரோரா, ஜனாதிபதியிடம் வழங்கினார்.

14:33 (IST)25 May 2019
கமலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பாராட்டு

கட்சி தொடங்கிய சிறிது காலத்திலேயே, தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ள கமல், மிகுந்த வரவேற்பை பெறுவார் என நடிகர் பிரகாஷ் ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

13:51 (IST)25 May 2019
16வது லோக்சபா கலைப்பு

16வது லோக்சபாவை கலைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

மத்திய அமைச்சரவை, லோக்சபாவை கலைத்து நிறைவேற்றிய தீர்மானத்தையடுத்து ஜனாதிபதி உத்தரவு

13:09 (IST)25 May 2019
ராகுல் ராஜினாமா செய்தியில் உண்மையில்லை : காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டதாக ANI  செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்திக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா, ராகுல் ராஜினாமா என்ற செய்தியில் உண்மையில்லை. கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

12:04 (IST)25 May 2019
ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை ,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தி ஆகியோர் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

11:32 (IST)25 May 2019
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் துவங்கியது

லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கும் பொருட்டு, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் துவங்கியது.  இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

11:12 (IST)25 May 2019
மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து

பிரதமர் பதவியை இரண்டாவது முறையாக ஏற்க உள்ள மோடிக்கு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குருவின் நினைவு தினத்தையொட்டி திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு,  ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

11:08 (IST)25 May 2019
நாளை ( மே 26ம் தேதி) குஜராத் செல்கிறார் மோடி

மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நாளை மாலை குஜராத் சென்று தனது தாயாரிடம் வாழ்த்து பெறுகிறார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, வாரணாசி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

10:16 (IST)25 May 2019
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை. 

டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

10:12 (IST)25 May 2019
இபிஎஸ், ஓபிஎஸ் டில்லி பயணம்

முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

10:11 (IST)25 May 2019
முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் ஓபிஎஸ் மகன்

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்.

10:04 (IST)25 May 2019
ஸ்டாலின் அறிவாலயம் வருகை

திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை

சென்னை சி.ஐ.டி காலனி இல்லம் சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார் ஸ்டாலின்

×Close
×Close