தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை!

தனிப்பட்ட முடிவை எடுத்ததால் இப்படி ஒரு தோல்வி

Tamilnadu lok sabha election results bjp pmk dmdk : தமிழக லோக்சபா முடிவுகள் இன்று வெளியான. 39 தொகுதிகளின் லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கூடவே 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின.

போட்டியிட்ட 4 தொகுதிகளில் ஒன்றில்கூட தேமுதிக முன்னிலை வகிகவில்லை என்பது தேதிமுதிக தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும் பிரேமலதாவின் தம்பியுமான எல். கே சுதீஷ் படு தோல்வியை சந்தித்துள்ளார்.

அதே போல் வடசென்னை, திருச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் காலை முதல் தேமுதிக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதிமுக உடன் கூட்டணி வைத்த தேமுதி-வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பித்து விட்டதாக தேமுதிக தொண்டர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். அதே போல் விஜயகாந்தின் தனிப்பட்ட செயல்பாடு இல்லாமல் பிரேமலாத தனிப்பட்ட முடிவை எடுத்ததால் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தாக கூறப்படுகிறது.

மத்தியில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.கூட்டணியில் சீட் கேட்ட போது பாமகவுக்கு இணையாக தொகுதிகள் கேட்டனர்.ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக மிகவும் பின்னடைவில் உள்ளது.

இதுபுறம் இருக்க பாமக மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. பாமக ஏழு தொகுதியில் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை.பாமகவின் இந்த தோல்விக்கு கட்சி தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. தர்மபுரி தொகுதியில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காலை முதல் 3 சுற்றில் முன்னிலை அவர் தற்போது 50 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மத்தியில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது பெருத்த அவமானமாக பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த இந்தியாவில் பாஜக பெரும்பான்மை பெற்றாலும்கூட, தமிழகத்தில் பாஜக காலூன்றுவது இம்முறையும் கேள்விக்குறியாகியுள்ளது.

தலை தப்பித்ததா அதிமுக ஆட்சி? அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு!

தமிழகத்தில் அதிமுகவின் மெகா கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 5 தொகுதிகளில் கோவையில் மட்டுமே முன்னிலை வந்தது. ஆனால் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் 153154 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை பின்னுக்குத் தள்ளினார். அதேபோல் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

மொத்தத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, தேமுதிக, பாமக 3 கட்சிகளும் படும் தோல்வியை தமிழகத்தில் சந்தித்திருப்பது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் அண்டு புதிய கட்சியாக கால்பதித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக பல தொகுதிகளில் 3 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளது. மொத்தத்தில் 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் தமிழகத்தில் பாமக, பாஜக, தேமுதிகவுக்கு ராசியில்லாத தேர்தலாக மாறியுள்ளது.

இப்படியொரு தேர்தல் முடிவின் சோகத்திலும் அதிமுக-வுக்கு நடந்த நல்ல விஷயம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஹாப்பி!

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close