தலை தப்பித்ததா அதிமுக ஆட்சி? அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு!

தேர்தல் முடிவு அவரின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துவிட்டது.

Tamil Nadu news today
Tamil Nadu news today

tamilnadu lok sabha election 2019 dmk admk results : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழக தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் அப்படியே தலைக்கீழாக புரட்டிப்போட்டு விட்டது. மத்தியியில் பாஜக 342 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும், இதர கட்சிகள் 109 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, மீண்டும் பாஜகவே ஆட்சி அமைப்பதும், மோடியே மீண்டும் பிரதமர் என்பதும் உறுதியாகிவிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எனவே, இதில் திமுக அதிக இடங்களை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் தற்போதையை நிலவரப்படி திமுக 14 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்படும் அன்புமணி ராமதாஸ்

அதிமுகவை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி கவலை இல்லை. இடைத்தேர்தலின் முடிவுகளே முக்கியம். தற்போதைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வெறும் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் எப்படியும் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே, இன்னும் 2 வருடத்திற்கு அதிமுக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் அப்படியே தொடர்வது உறுதியாகியுள்ளது.

Loksabha election results 2019 live updates

இந்த இரு தேர்தல்களையும் திமுக பெரிதாக நம்பி இருந்தது. இடைத்தேர்தல் 90 சதவீத தொகுதிகளை திமுகவே பிடிக்கும் என ஸ்டாலின் கருதினார். எனவே, எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர அவர் திட்டமிட்டிருந்தார். அதோடு, திமுகவுக்கு சாதகமாக வாக்களிப்போம் என தங்க தமிழ்ச்செல்வனும் கூறியிருந்ததால் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அமமுக ஒரு இடத்தில் கூட முன்னணியில் கூட வரவில்லை.

மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என ஸ்டாலின் ஆணித்தரமாக நம்பினார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் என அவர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால், தேர்தல் முடிவு அவரின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துவிட்டது.

எனவே, பாராளுமன்ற தேர்தலில் 36 இடங்களில் முன்னிலையில் இருந்தும் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் 2 இடங்களை பெற்றாலும், சட்டசபை தேர்தலில் 8 இடங்களில் முன்னிலையில் இருப்பதன் மூலம் தனது ஆட்சியை தக்க வைத்ததன் மூலம் அதிமுக வெற்றி பெற்றதாகவே பார்க்கப்படுகிறது.

Loksabha election results 2019 live updates

234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 212. இதில் அ.தி.மு.க.-111 (சபாநாயகர் சேர்த்து), அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களாக (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக இருக்கிறது.

ஆனால் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருப்பதாலும் அவர்களை கழித்து பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது.

போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் 3 எம்.எல்.ஏக்கள் முடிவு மிகவும் முக்கியமான ஒன்று. 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அரசு 10 இடங்களை எளிதாக கைப்பற்றினாலும் இந்த 3 எம்.எல்.ஏக்கள் சிக்கலும் இன்னும் நீடிக்கிறது.

Tamil Nadu Assembly By Election 2019 Results Live

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu lok sabha election 2019 dmk admk results

Next Story
இப்படியொரு தேர்தல் முடிவின் சோகத்திலும் அதிமுக-வுக்கு நடந்த நல்ல விஷயம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஹாப்பி!district wise rural local body election results
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com