/tamil-ie/media/media_files/uploads/2021/04/elections-.jpg)
Thanthi TV Opinion poll results 01-04-2021 : ஐம்பது ஐம்பது தொகுதிகளாக தந்தி டிவி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்பினை வெளியிட்டு வருகிறது. நேற்று இரவு வெளியான கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்களின் பார்வைக்கு!
திமுக வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கும் தொகுதியாக உத்திரமேரூர், போளூர், செய்யாறு, வந்தவாசி, குடியாத்தம், சங்கராபுர, ரிஷிவந்தியம், மயிலம், மணச்சநல்லூர், சிங்காநல்லூர், ஆர்.கே. நகர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தெற்கு மற்றும் மத்திய தமிழகத்தில் இ.பி.எஸிற்கான ஆதரவு குறைய காரணம் என்ன தெரியுமா?
அதிக வெற்றி பெற வாய்ப்பு உள்ளவையாக ஆரணி, கலசப்பாக்கம், அணைக்கட்டு, ஜோலார்பேட்டை மற்றும் அரியலூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. அதிமுக கூட்டணி கட்சியான பாமக ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி பெற சாத்தியங்களை கொண்டுள்ளதாக கூறியுள்ளது தந்தி நடத்திய கருத்துக் கணிப்பு. 234 தொகுதிகளில் சுமார் 48 ஆயிரம் நபர்களிடம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது தந்தி டிவி.
தினமும் 50 தொகுதிகளாக பட்டியலிட்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவருகின்ற நேரத்தில் இது நேற்று இரவு ஒளிபரப்பான கருத்துக்கணிப்பு குறித்த தொகுப்பாகும்.கடும் போட்டி நிலவும் தொகுதிகளாக கடலூர், குன்னம் (அதிமுகவிற்கு வாய்ப்பு), முசிறி, திருச்சி கிழக்கு (அதிமுகவிற்கு வாய்ப்பு), மணப்பாறை (அதிமுகவிற்கு வாய்ப்பு), ஸ்ரீரங்கம், வேடசந்தூர் (அதிமுகவிற்கு வாய்ப்பு), ஒட்டன்சத்திரம், ஆண்டிப்பட்டி, பொள்ளாச்சி (அதிமுகவிற்கு வாய்ப்பு) அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.