Advertisment

சமூக நீதியின் சின்னம் பானை.. உற்சாக முழுக்கத்துடன் சின்னத்தை அறிமுகப்படுத்திய தொல். திருமாவளவன் வீடியோ!

முதலில் மோதிரம் சின்னம் கேட்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பானை சின்னம்

பானை சின்னம்

பானை சின்னம் : சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் விழுப்புரம் தொகுதியில் விசிகவின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் உதய சூரியன் சின்னத்தை போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்திலும், திருமாவளவன் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவார் என விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசிக தரப்பில் திருமாவளவனுக்காக முதலில் மோதிரம் சின்னம் கேட்கப்பட்டது. அது கிடைக்காத பட்சத்தில் பலாப்பழம் சின்னம் கேட்கப்பட்டது. இறுதியில திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கி உள்ளது.

மேலும் படிக்க.. ஈரோட்டில் தனி சின்னத்தில் மதிமுக போட்டி’ – வைகோ

இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்தில் களம் காண்கிறார்.

Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment