2.0 Ticket Booking : இந்தியா முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களின் காத்திருப்பு நாளை பூர்த்தியாகும் வேளையில் இப்படத்திற்காக முன்பதிவு புக்கிங்கில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் நாளை வெளியாகிறது 2.0 படம். பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் முதல் படமான 2.0 அமெரிக்காவில் மட்டுமே ரிலீசுக்கு முன்பு சுமார் 120 கோடி வசூலை பார்த்துள்ளது.
மேலும், இந்தியாவில் மட்டுமே சுமார் 6,500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வட இந்தியாவில் இப்படத்திற்கான முன்பதிவு செய்வதில் புதிய சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது.
2.0 Ticket Booking : 2.0 படம் சிக்கல்
ஷாரூக் கான் நடித்துள்ள ஸீரோ மற்றும் நடிகர் விஷால் தயாரிப்பில் ஹிந்தி உட்பட பிற மொழிகளிலும் வெளியாக இருக்கும் கோலா கோல்டு ஃபீல்சு படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக தாயாராக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பலரும் இந்த படங்களை காண்பதற்காக டிக்கெட் புக் செய்து வருகின்றனர். குறிப்பாக ஷாரூக் கான் படமான ஸீரோவிற்கு பலரும் போட்டிப்போட்டு டிக்கெட் புக செய்கின்றனர்.
2.0 ரிலீசுக்கு முன்பே 3000 திருட்டு இணையத்தளங்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்
இந்த நேரத்தில் 2.0 படத்தின் டிக்கெட் புங்கிங் வசதியை தொடங்கினால், இந்த இரண்டு படங்களின் டிக்கெட் வசூல் பாதிக்கப்படும் என்றும், இதனால் 29ம் தேதியே டிக்கெட் முன்பதிவு தொடங்க வேண்டும் என்று ஏஏ ஃபிலிம்ஸ் வலியுறுத்தி வருகிறது. இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்த முயன்றும் விநியோகிஸ்தர்கள் 2.0 படத்தின் முன்பதிவுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
November 2018
இதனால் தற்போது டெல்லியில் மட்டுமே 2.0 படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதுவும், புக் மை ஷோ மூலம் புக் செய்பவர்களுக்கே டிக்கெட் பெறும் வசதி உள்ளது. ஆனால் பேடிஎம் மற்றும் பிவிஆர் இணையத்தளத்தின் முலம் டிக்கெட் பெற நினைப்பவர்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலை சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், மெல்ல மெல்ல ஒவ்வொரு பகுதிகளிலும் டிக்கெட் முன்பதிவு சேவை தொடங்கி வருகிறது.