2.O Box Office Collection Day 19: ரஜினிகாந்தின் 2.0 படம் இந்தியில் செமையாக கல்லா கட்டி வருகிறது. படம் ரிலீஸாகி 19-வது நாளான நேற்று (டிசம்பர் 17) 2.0-வின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? முழு விவரத்திற்கு தொடருங்கள்.
ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணிக்கே இந்தியில் மதிப்பு உண்டு. கூடவே அக்ஷய்குமாரும் நடித்திருப்பதால் இந்தியில் 2.0 படத்திற்கான வரவேற்புக்கு கேட்கத் தேவையில்லை.
இதர இந்திப் படங்களின் வசூலை விஞ்சி பாக்ஸ் ஆபீஸில் பயணிக்கிறது 2.0 படம்! 19 நாள் நிலவரப்படி, இந்தி வெர்ஷனில் மட்டும் 183.75 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது 2.0. டிசம்பர் 21-ம் தேதி ஷாருக்கான் – அனுஷ்கா ஷர்மா நடிப்பில் ‘ஸீரோ’ வெளியாக இருக்கிறது. அதன்பிறகு இந்தியில் 2.0 அலை சற்றே தணியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அதற்குள் 2.0 கலெக்ஷன் ரூ 200 கோடியை தாண்டிவிடும் என இந்தி திரையுலக புள்ளிகள் கருத்து தெரிவிக்கின்றனர். உலக அளவில் வசூல் நிலவரம் ரூ 600 கோடியை தாண்டிவிட்டதாக 11-வது நாளிலேயே லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Read More: 2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி
இதற்கிடையே 2019-ல் சீனாவில் 2.0 படத்தை மொழி மாற்றி வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கு 10,000 தியேட்டர்களில் 56,000 ஸ்கிரீன்களில் வெளியிட இருக்கிறார்கள். அவற்றில் 47,000 ஸ்கிரீன்கள் 3 டி வசதி கொண்டவை. எனவே சீனாவிலும் 2.0 வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:2 o box office collection day 19 rajinikanth hindi