Rajinikanth Starrer 2.O Movie Box Office Collection in Hindi: ரஜினிகாந்தின் 2.0 பட பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இந்தியிலும் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தியில் ரூ 175 கோடி வசூலை தாண்டிய 2.0, இந்த வார இறுதிக்குள் ரூ 200 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள், திரையுலகப் புள்ளிகள்.
ரஜினிகாந்த் - அக்ஷய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழைப் போலவே அந்த மொழிகளிலும் 2.0 வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read More: 2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
2.0 ரிலீஸாகி 17-வது நாளான டிசம்பர் 16 நிலவரப்படி படத்தின் வசூல் 177.75 கோடி என்கிறார்கள், திரையுலகப் புள்ளிகள்! கவனிக்க, இது படத்தின் இந்தி வெர்ஷன் வசூல் மட்டுமே! வட இந்தியாவில் வெளியான தமிழ், தெலுங்கு வெர்ஷன்களின் வசூல் தனி!
2.O Box Office Collection: இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி
2.0 Box Office Collection: சஞ்சு, பத்மாவத் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பெரிய வசூல் இது!
2.0 படம் ரிலீஸ் ஆனது முதல் இந்தியில் வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 3-வது வாரமாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியில் இந்த ஆண்டு நேரடி இந்திப் படங்களான சஞ்சு, பத்மாவத் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பெரிய வசூல் இது!
இந்த வார இறுதியில் ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா, கத்ரினா கைப் நடித்த ‘ஸீரோ’ நேரடி இந்திப் படம் வெளியாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரொமாண்டிக் கொண்டாட்டமான அந்தப் படம் வெளியானால் 2.0 மேனியா சற்றே அங்கு ‘டல்’ அடிக்கலாம்.
எனினும் அதற்குள்ளாக 2.0 படத்தின் வசூல் ரூ 200 கோடியை எட்டிவிடும் என்பதுதான் இந்தி திரையுலக வர்த்தகத்தை உற்று நோக்குபவர்களின் கணிப்பு.
Read More: 2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்... இதுவரை ரூ 30 கோடி
கடந்த வாரத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை 5.85 கோடி, சனிக்கிழமை 9.15 கோடி, ஞாயிற்றுக் கிழமை 12 கோடி, திங்கட்கிழமை 3.75 கோடி, செவாய்கிழமை 2.95 கோடி, புதன்கிழமை 2.40 கோடி, வியாழக்கிழமை 1.90 கோடி என வசூலில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. எனவே இந்த வார இறுதிக்குள் 200 கோடி ரூபாயை எட்டுவது பெரிய சிரமமாக இருக்காது என்கிறார்கள்.
Read More: ரூ 1000 கோடியை தொடுகிறதா? மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலுமே வசூலில் சாதனை படைத்து வரும் 2.0 படம், 11-வது நாளில் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் படம் 11 நாட்களில் 560 கோடி ரூபாய் வசூல் செய்ததே இதற்கு முன்பு இந்தியப் படம் ஒன்றின் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை 2.0 தகர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.