ரூ 1000 கோடியை தொடுகிறதா? மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு

2.O Movie Box Office Collection: 2.0 படம் 500 கோடி ரூபாய் வசூல் என்று அறிவித்த பின்னும் அப்படம் தமிழகம் முழுவதும் 398 ஸ்கிரீன்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Rajinikanth's 2.O Movie Total Collection, ரஜினிகாந்த், 2.O படம் வசூல்
Rajinikanth's 2.O Movie Total Collection, ரஜினிகாந்த், 2.O படம் வசூல்

Rajinikanth’s 2.O Movie Total Collection: ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரித்து உலகம் முழுவதும் 7000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான படம் 2.0. இந்தப்படம் முதல் நான்கு நாட்களிலேயே 400 கோடி வசூலானதாக அறிவிக்கப்பட்டது. இப்படியொரு அதிகாரபூர்வ அறிவிப்பு, இதுவரை எந்த இந்திய படங்களுக்கும் வந்ததில்லை. இதுவே இந்திய திரை உலகுக்கு புது ஆச்சர்யம்!

Read More: 2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி

பொதுவாக விமர்சகர்களும், ஊடகங்களும் தோராயமாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை சொல்வது வழக்கம். அதிலும் படங்களில் நடிக்கும் கதாநாயகர்களின் ப்ரமோஷனுக்காக, ‘100 கோடி கிளப்’ என புரளிகள் கிளம்புவது சகஜம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க முக்கிய நிர்வாகி ஒருவரே நம்மிடம் வேதனையை பகிர்ந்தார்.

Read More: 2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி

இந்நிலையில் படம் தயாரித்த லைகா நிறுவனமே 500 கோடி வசூல் என்று அறிவித்ததன் மூலமாக அந்தத் தொகைக்கு முறையாக வரி கட்டவும் தயாராகிவிட்டது என்பதை கவனிக்க வேண்டும். இது ஆரோக்கியமான ஒரு அம்சம்!

2.0 படம் 500 கோடி ரூபாய் வசூல் என்று அறிவித்த பின்னும் அப்படம் தமிழகம் முழுவதும் 398 ஸ்கிரீன்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசூல் சாதனையை ஏற்படுத்தியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது.

தெலுங்கு, ஹிந்தி வெர்ஷன்களிலும் படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் வசூல் ரூ 27 கோடியை தாண்டியது. இங்கு 60-க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. மதுரையில் எந்த படமும் 7 தியேட்டருக்கு மேல் வெளியான வரலாறு கிடையாது. 2.0 மட்டும் 23 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகி இருவாரங்களை கடந்து தற்போதும் 15 திரையரங்குகளில் ஓடி ரூ 18.1 கோடி வசூல் செய்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் இரண்டு வாரம் 1041 திரையரங்குகளிலும், மூன்றாவது வாரம் 398 திரையரங்குகளிலும் ஓடி இதுவரை ரூ213 கோடியை தாண்டியது. உலகம்முழுவதும் தமிழ் வெர்ஷனில் 461 கோடியையும் தெலுங்கு, ஹிந்தி வெர்ஷன்கள் சேர்ந்து 285 கோடியையும் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மொத்த வசூல் ரூ 750 கோடியை கடந்திருப்பதாக கூறுகின்றனர்.

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட விடுமுறையினாலும் சுலபமாக 1000 கோடியை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி தொட்டால், அதையும் அதிகாரபூர்வமாக அறிவித்தால், அது இந்திய சினிமாவின் பெரும் சாதனையாக கருதப்படும்.

திராவிட ஜீவா

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 2 o movie box office collection touches record

Next Story
அருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்?Arunraja Kamaraj: kanaa Director Arunraja Kamaraj, அருண்ராஜா காமராஜ், கனா படம் இயக்குனர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com