2.O Full Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸை தடுக்க் லைகா எடுத்த நடவடிக்கைகள் தெரியுமா?

TamilRockers Leaked 2.O Full Movie in Online: தியேட்டரில் ரசிகர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுப்பது சுலபமல்ல. ஒவ்வொருவரும் இன்று ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பமான...

2.O Movie Full Movie Download in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி வெப்சைட்கள் சினிமாவுக்கு மிரட்டலாக இருப்பது ரகசியமல்ல. விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான சர்கார் படம் ரிலீஸாகி சில மணி நேரங்களில் ‘லீக்’ ஆனது. வட சென்னை, பாலிவுட் படமான தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தானுக்கும் இதுதான் நேர்ந்தது. அதே நிலை ரஜினிகாந்த் நடித்த 2.0 என்கிற பிரமாண்ட படத்திற்கும் நிகழுமா? என்பது கோலிவுட்டின் டாக்!  சினிமாத் துறையினர் பைரசியின் தேவையை குறைக்கிற விதமான நடவடிக்கைகளை நீண்டகால நோக்கில் யோசிக்க வேண்டும். பைரசி வெப்சைட்கள் முழுக்க விளம்பரதாரர்கள் மூலமாக இயங்குகின்றன. நேரடி டவுன்லோடு மூலமாக அவை வருமானம் பார்ப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க : வெளியானது 2.0 திரைப்படம்.. ரசிகர்கள் கோலாகல வரவேற்பு

இரு வாரங்களுக்கு முன்பு, ‘விரைவில் 2.o இணையத்தில் விரைவில் வருகிறது’ என ஒரு வதந்தி பரவியது. தமிழ் ராக்கர்ஸ் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் பக்கம்தான் இந்த வதந்தீயைப் பற்ற வைத்தது. பிறகு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தங்களுக்கு ட்விட்டரில் அக்கவுண்டே கிடையாது என அறிவித்தது.

2.O Full Movie Download: Tamilrockers leaked Rajinikanth's 2.O full movie online- 2.O படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்

Rajinikanth’s 2.O full movie in online- 2.O படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்

2.O Full Movie Download In Tamilrockers: லைகா எடுத்த நடவடிக்கைகள்

2.o ரிலீஸுக்கு தயாரான சூழலில், அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா பைரசிக்கு எதிரான போராட்டத்தில் 24 மணி நேரமும் சுழல்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -க்காக பேசிய லைகாவின் தயாரிப்பு நிர்வாகி சுந்தர். ‘10 பேர் அடங்கிய தொழில்நுட்பக் குழுவை இந்தப் பணியில் இறக்கியிருக்கிறோம். பைரசியை தடுக்க என்ன விதமான நடவடிக்கைகளை செய்கிறோம் என்பதை விரிவாக கூற விரும்பவில்லை. ஏனென்றால், அது ரகசியமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை’ என்றார்.

மேலும் படிக்க : 2.0 பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்ஸில் புதிய சாதனை

2.0 படத்திற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ‘சென்னையிலும் டெல்லியிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்தோம். பைரசிக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள். 2.0 படம் தொடர்பாக ஆன்லைனில் தேடினால் லிங்க் ஓப்பன் ஆகாத அளவில் நடவடிக்கை இருக்கும்’ என்றார்கள் அவர்கள்.

சினிமாத் துறையை சேர்ந்த இன்னொருவர் கூறுகையில், ‘பைரசியை தடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெறுமா? எனத் தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் தமிழ் ராக்கர்ஸுக்கு முடிவு கட்டப்படும். சினிமாத் துறையினர் பைரசியின் தேவையை குறைக்கிற விதமான நடவடிக்கைகளை நீண்டகால நோக்கில் யோசிக்க வேண்டும். பைரசி வெப்சைட்கள் முழுக்க விளம்பரதாரர்கள் மூலமாக இயங்குகின்றன. நேரடி டவுன்லோடு மூலமாக அவை வருமானம் பார்ப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என்றார் அவர்.

2.O Full Movie Download: Tamilrockers leaked Rajinikanth's 2.O full movie online to download- 2.O படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்

Rajinikanth’s 2.O full movie in Tamilrockers- லைகா எடுத்த நடவடிக்கை

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ‘பைரசிக்கு எதிராக போராடுவது, சாக்கடையை அகற்றுவது போன்றது. எங்கள் தரப்பில் சரியான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கேயோ யாரோ இந்தத் துறையை அசிங்கப்படுத்துகிறார்கள்.

ஒரு வெப்சைட்டை தடை செய்தால், வேறு பெயரில் வருகிறார்கள். மேலும் அவற்றை கண்டறிவது வெகு சிரமம். இதுவரை 900 சட்டவிரோத வெப்சைட்களை தடை செய்திருக்கிறோம். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தையும் இதை கவனிக்க வலியுறுத்தியிருக்கிறோம். நேற்றும்கூட இது தொடர்பாக மனு அனுப்பியிருக்கிறோம்’ என்றார் எஸ்.ஆர்.பிரபு.

மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்திய எஸ்.ஆர்.பிரபு, ‘தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியுமென்றால், இதை ஏன் செய்ய முடியாது என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய மாநில அரசுகள் சட்டத்தை கடுமையாக அமல் செய்ய வேண்டியதுதான் முக்கிய தேவை. தவிர, அடிப்படை விழிப்புணர்வும் அவசியமாக இருக்கிறது. தனி ஒருவரால் இதில் எதையும் செய்ய முடியாது’ என்றார் அவர்.

மேலும் படிக்க : 2.0 ரெவ்யூ…. சுத்தமான தரமான ரஜினி படம்

படத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேற்கொள்ளும் கியூப் நிறுவனம் அனைத்து பிரிண்ட்களிலும் கண்ணுக்கு புலப்படாத ‘வாட்டர் மார்க்’ அறிகுறிகளை வைக்கவே செய்கிறது. இது குறித்து பேசிய சினிமா புள்ளி, ‘பைரசியில் உள்ள வாட்டர் மார்க் அடிப்படையில், எந்தத் தியேட்டரில் படம் காபி செய்யப்பட்டது என்பதை கண்டு பிடிக்க முடியும். அதை ஏன் செய்யவில்லை?’ என கேள்வி எழுப்புகிறார்.

திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘தியேட்டரில் ரசிகர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுப்பது சுலபமல்ல. ஒவ்வொருவரும் இன்று ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பமான ஹீரோ திரையில் தோன்றும்போது அதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் போடுவது இயல்பான விஷயமாகிவிட்டது.

துரதிருஷ்டவசமாக சிலர் இதோடு நிற்பதில்லை. எனினும் தியேட்டர்களில் இதை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் சுத்தமாக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த தியேட்டர்களில் சிசிடிவி கேமராக்களும் அமைத்து வருகிறோம்’ என்றார்.

2.0 போன்ற தொழில்நுட்பத்தில் மேம்பட்ட படங்களை காபி செய்வது சுலபமல்ல என்றே கருதப்பட்டது, ஆனால் இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி படம் ரிலீஸான நவம்பர் 29-ம் தேதியே படத்தை தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துவிட்டதுதான் கொடுமை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close