Advertisment

2.0 Review: இந்தியா முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

Rajinikanth-Akshaykumar's 2.O Movie Review In Tamil: ரஜினி படம் என்றாலே காலை முதல் ஷோ தான் பிரம்மாண்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2.0 Review, 2.0 release, 2.0 first day first show

2.0 Review, 2.0 release, 2.0 first day first show

Rajinikanth's 2.0 Movie Review: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் 2.o திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (நவ.29) வெளியாகியது.

Advertisment

4 வருட உழைப்பு, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், 500 கோடி பட்ஜெட் என்று ஒவ்வொரு நாளும் மெறுகேற்றத்திற்கு உள்ளாகி உருவாக்கப்பட்டது தான் இந்த 2.0. விஞ்ஞானத்திற்கும், இன்றைய நடைமுறை வாழ்விற்கும் மத்தியில் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமல் மிக பிரம்மாண்ட விஷுவல் ட்ரீட்டினை ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார் இயக்குநர் சங்கர்.

2.0 Movie Review : முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் ரியாக்‌ஷன்ஸ்:

05:30 PM : இணையத்தில் வெளியான 2.0

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் 2.0 படம் வெளியாகியுள்ளதால் திரைப்படக் குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

05:00 PM : எனக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்... அது ரஜினி தான்...

நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  2.0 படத்தின் பிரம்மாண்டத்தினை  கருத்தாக பதிவிட்டு, எனக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்... அது ரஜினி தான் என்று கூறியுள்ளார்.

04:40 PM : பிக்பாஸ் புகழ் விஜயலட்சுமியின் வாழ்த்துகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயலட்சுமி 2.0 படம் பார்த்துவிட்டு, தன்னுடைய கருத்தினை பதிவிட்டுள்ளார்.

04:00 PM : விஷாலின் வாழ்த்து

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் 2.0 படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

03:30 PM : மாமனாரை வாழ்த்திய மருமகன்

தனுஷ் தன்னுடைய மாமனார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் படத்தை திரையரங்குகளில் மட்டும் பாருங்கள் என்று தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அப்படத்தின் குழுவினருக்கு அவருடைய பாராட்டினையும் தெரிவித்திருக்கிறார்.

03:00 PM : படத்தை பார்க்க முடியாமல் வருத்தப்படும் தெலுங்கு நடிகர்

தெலுங்கு பட நடிகர் நானி இன்று அதிகாலையில் தன்னுடைய படத்தின் படப்பிடிபிற்கு சென்றுவிட்டதால் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க இயலவில்லை என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

02:30 PM : கோலிவுட் திரை உலகினர் கொண்டாடும் 2.0

நேற்று இரவில் இருந்து கோலிவுட் திரையுலகினர் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான தருணம் 2.0 தான். இன்று காலை முதல் பலர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து வருகிறார்கள். நடிகர் சூர்யா, நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் இந்த படத்திற்காக காத்திருப்பதை தெரியப்படுத்தினார்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தினை பார்த்துவிட்டு படத்தின் குழுவினருக்கு பாராட்டுகளை பதிவு செய்தார். ரஜினியின் வேற லெவல் படமாக இது இன்று மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : கோலிவுட் திரைப்படத்தினர் கொண்டாடிய 2.0 

02:00 PM : ரஜினியின் ஃப்ர்ஸ்ட் லுக்கிற்காக 3 நிமிடம் pause

2.0 படத்தில் ரஜினியின் ஃப்ர்ஸ்ட் லுக்கினை ரசிகர்கள் கொண்டாட 3 நிமிடம் படம் Pause செய்யப்பட்டது. அப்போது அவரின் ரசிகர்கள் திரை முன்பு ஆர்பரித்து கொண்டாடினார்கள்.

12:50 PM : மும்பை அரோரா திரையரங்கில் கொண்டாட்டம்

2.0 படத்தின் வெளியீட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், துள்ளல் என மும்பையில் இருக்கும் அரோரா திரையரங்கையே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்கள்.

12:30 PM : சாதிக்கத் தொடங்கியது 2.0

இதற்கு முன்பு உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்ற பெயரைப் பெற்ற தென்னிந்திய படம் பாகுபலி 2. 9000 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது. தற்போது 2.0 படம் மட்டும் சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

12:15 PM : லண்டனில் வலம் வரும் 2.0

உலகம் முழுவதும் பிரம்மாண்டமாய் வெளியாகிய 2.0 படத்தின் போஸ்டர்கள் லண்டனில் இருக்கும் வாகனங்களில் எல்.ஈ.டி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது.

11:45 AM : ரசூல் பூக்குட்டி

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கிறது ரசூல் பூக்குட்டி. ஒலி வடிவமைப்பாளாரான இவர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் சங்கர், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார்.

11:00 am :  2.0 Review - வெறித்தனமாக கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்

ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இன்று வெளியான 2.0 வை பார்த்துவிட்டு, வெறித்தனம் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

10:45 am : திருட்டுத் தனமாக இணைய தளத்தில் வெளியிடத் தடை

2.0 படத்தினை திருட்டுத் தனமாக இணைய தளத்தில் வெளியிட 1500 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட உத்தரவில் தமிழ் ராக்கர்ஸ் உட்பட பல்வேறு இணைய தளங்களில் 2.0 வெளியிட தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

10.30 am: ரஜினியின் 2.0 எப்படி இருக்கிறது ? 

இதுவரை படத்தை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்கள் அனைவரும் 2.0-வை வியந்து கொண்டாடுகிறார்கள். படம் ரஜினிக்காகத் தான். ரஜினி தான் 2.0.

மேலும் படிக்க : சூப்பர் ஸ்டாரின் 2.0 எப்படி இருக்கிறது ? 

9. 50 am: இந்தியன் எக்ஸ்பிரஸ் திரைப்படம் விமர்சகர் கோமல் கூறுகையில், “அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரத்தை வியக்க வைக்கும் வகையின் சங்கர் உருவாக்கியுள்ளார். குறிப்பாக பட்சி ராஜன் கதாப்பாத்திரம் பிரம்மாண்டமாக உள்ளது. படத்தில் அறிவியலோடு இணைந்து நகைச்சுவையும் உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

9. 30 am: படத்தை பார்த்து முடித்த பலரும் இதனை “தாறு மாறு படம்” என்றே விமர்சித்து வருகின்றனர். இந்த ஆண்டு முடிவு ரஜினி ரசிகர்களுக்கு தான் என்பது போல் அமைந்துள்ளது இன்றைய 2.0 ரிலீஸ்.

9. 10 am: வேலூரில் உள்ள தியேட்டரில் படத்தின் ரிலீசை முன்னிட்டு, ரசிகர்கள் தேங்காய் மீதும், பூசணி மீதும் சூடம் ஏற்றி திருஷ்டி கழித்து வருகின்றனர். மேலும், “எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார்... வாழ்க” போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

9. 00 am: தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் 2.0 படத்தின் வெளியீட்டை விழா போல் கொண்டாடி வருகின்றனர். பலரும், “அடுத்த சூப்பர் ஸ்டார் எல்லாம் யாரும் இல்லை... இவர் தான் ஒரே சூப்பர் ஸ்டார்” என்று ரஜினியை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

8. 50 am: பெங்களூரூவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் ரஜினி ரசிகர்களால் நிறம்பியது. பெரும்பாலான தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆனது.

2.0 theatres housefull in bengaluru, 2.0 Release

8. 40 am:  பாலிவுட்டிலும் ரஜினி புகழ்.  2.0 படத்திற்கு வாழ்த்து சொன்ன ரஜினி ரசிகர்கள்.

8.30 am: படத்தை பார்த்த ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு.

 

8.15 am:  தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள்.

 

Tamil Cinema Rajinikanth Super Star Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment