சீதக்காதி படம் நீண்ட நேரம் இருப்பதாக விமர்சனங்கள் வந்ததையடுத்து படத்தில் இருந்து 23 நிமிட காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணீதரன் கூட்டணியில் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி ரிலீஸான படம் ‘சீதக்காதி'.
இது ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் கேரியரில் 25-வது படமாம். இதில் இயக்குநர் மகேந்திரன், பகவதி பெருமாள், சுனில், ராஜ்குமார், மௌலி, அர்ச்சனா, பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
படியுங்கள்... சீதக்காதி விமர்சனம்
சீதக்காதி படத்தில் 23 நிமிடங்கள் குறைப்பு
இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்திருந்தார். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான லுக்கில் நடித்திருந்தார். 'ஆதிமூலம் ஐயா' என்ற இக்கதாபாத்திரத்துக்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு விஜய் சேதுபதி பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டாராம்.
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்து ரசித்த திரையுலக பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர். இருந்தாலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆகையால் தற்போது, இப்படத்தில் 23 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.