28 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாள் உலகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு நாளாக இருந்தது. 1992 ஜூன் 27-ம் தேதி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய, ’அண்ணாமலை’ திரைப்படம் வெளியானது.
நாட்டு தலைவனையே சூஸ் பண்றோம்… வீட்டு தலைவனை?
இந்த படம் இன்றும், பல சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அறிமுகப் பாடல் உட்பட அனைத்துப் பாடல்களும் எவர் கிரீன் ரகம்.
‘வந்தேன்டா பால்கரன்’, குஷ்புவுடனான ரஜினியின் கெமிஸ்ட்ரி, அவரது தோற்றங்கள், பவர்புல் உரையாடல்கள், தேவாவின் இசை, நட்பின் கதை, எஃபெக்டிவ் வில்லன்கள் என இறுக்கமாக பிணைக்கப்பட்ட திரைக்கதை தான் ‘அண்ணாமலை’.
’அண்ணாமலை’ படத்தில் தான் முதன்முதலில் பின்னணி இசையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் போடப்பட்டது. அவரது தீவிர ரசிகர்கள் #28YearsOfAnnamalai என்ற ஹேஷ் டேக்கை நேற்று இரவு முதலே ட்ரெண்ட் செய்யத் தொடங்கி விட்டனர். அதோடு படம் தொடர்பான சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் ரசிகர்களால் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளையும் டிரெய்லர்களையும் கூட வெளியிட்டனர்.
சுரேஷ் கிருஷ்ணா மற்றும் தேவா ஆகியோருடன் சூப்பர் ஸ்டார் இணைந்த முதல் படம் ‘அண்ணாமலை’. பின்னர் வீரா, பாஷா மற்றும் பாபா ஆகிய படங்களில் சுரேஷ் கிருஷ்ணா பணிபுரிந்தார். அவற்றில் பாஷாவுக்கு தேவா இசையமைப்பாளராக இருந்தார். கோலிவுட்டில் அதிக வசூல் செய்த படமாக மாறிய அண்ணாமலை, பாஷாவின் தெலுங்கு வெற்றியைத் தொடர்ந்து, ’பிர்லா ராமுடு’ என்ற பெயரில் 1995-ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியிடப்பட்டது.
ஸ்டன்னிங் ஹன்சிகா, ஆஸம் ஆண்ட்ரியா: முழு புகைப்படத் தொகுப்பு
இந்த படம் தமிழில் மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாள் ஓடிய முதல் படம் என்று கூறப்படுகிறது. 18 திரையரங்குகளில் 120 நாள் ஓடி சாதனைப் படைத்தது. மும்பையில் உள்ள பிரபலமான அரோரா தியேட்டர் உட்பட, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் அதுவரை கேள்விப்படாத ஒரு சாதனையை ’அண்ணாமலை’ நிகழ்த்தியது!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”