நாட்டு தலைவனையே சூஸ் பண்றோம்… வீட்டு தலைவனை?

கல்யாண பேச்சு எடுத்த ரெண்டு பேரையும் போலீசில் புடிச்சு கொடுத்துருவேன்னு சொல்றாங்க சார் என்று சிரித்துக்கொண்டே ஒரு அம்மா சொன்னார்.

Zee Tamil TV shows, thamizha thamizha
Zee Tamil TV shows, thamizha thamizha

Tamil TV News: ‘தமிழா தமிழா’ என்கிற ரியாலிட்டி ஷோவை இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். லாக்டவுன் காலத்தில் இந்த ஷோவை ஜீ தமிழ் டிவி மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த காலத்தில் கல்யாணத்துக்கு, காத்திருக்கும் பெண்கள் பல கண்டிஷன்களை போட்டு, பெற்றோரை திணற அடித்து வருகிறார்கள். அப்படியானவர்களை இணைத்து, கல்யாணத்துக்கு காத்து இருக்கும் பெண்கள், அவர்களின் அம்மாக்களை வைத்து ஒரு ஷோவை நடத்தினர் கரு. பழனியப்பன்.

செய்யூர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா: தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளான 5-வது எம்.எல்.ஏ.

அதாவது, கல்யாண பேச்சு என்று வரும்போது, தாய் – மகளுக்குள் என்ன முரண்பாடு இருக்கிறது என்று கரு. பழனியப்பன் கேட்டார். அப்போது பேசிய ஒரு தாய், கல்யாண பேச்சை எடுத்தாலே உனக்கு பாரமா இருக்கேனான்னு கேட்டு ஆஃப் பண்ணிடறாங்க சார் என்று சொன்னார். பிறகு கல்யாணம் செய்துக்கொள்ளப்போகும் பையனுக்கு குடும்பம் இருக்க கூடாது சார் என்று ஒரு இளம் பெண் சொல்ல, பாருங்க சார், இவங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கணும். ஆனால், அவனுக்கு குடும்பம் இருக்க கூடாதாம் என்று ஒரு அம்மா பதிலுக்கு சொன்னார்.

ஸ்டன்னிங் ஹன்சிகா, ஆஸம் ஆண்ட்ரியா: முழு புகைப்படத் தொகுப்பு

இன்னொரு தாய், கல்யாண பேச்சு எடுத்த ரெண்டு பேரையும் போலீசில் புடிச்சு கொடுத்துருவேன்னு சொல்றாங்க சார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். லவ் மேரேஜ் நாட் அலவுடு. என் அண்ணன் பையன் உங்களுக்கு கண்டிப்பா கரெக்ட்டா இருப்பாங்க என்று ஒரு அம்மா சொல்ல, நாட்டோட தலைவனையே சூஸ் பண்றோம். வீட்டுத் தலைவனை சூஸ் பண்ண முடியாதா என்று ஒரு இளம்பெண் கேட்க, முடியாது என்று தீர்வாக சொன்னார் அம்மா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil tv news zee tamil thamizha thamizha karu palaniappan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com