1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தொடரை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவாகும் '83' படத்தில் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்தை சீக்கா என செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். கிருஷ்ணமாச்சார்யாவாக நடிகர் ஜீவா நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார்.
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு 'கீ' மற்றும் 'கொரில்லா' என இரண்டு படங்கள் வெளியானது. ஆனால், இரண்டுமே படமே படு தோல்வியை சந்தித்தன. சீறு படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னமும் வெளியாகவில்லை.
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை பிரச்சனைகள் தீர்ந்த நிலையில், ஜிப்ஸி படம் தியேட்டர்களில் இந்த முறை கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.