New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Abarnathi-instagram-last-name.jpg)
அபர்னதி
ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக 'ஜெயில்' படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
அபர்னதி
ஆர்யா தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவில் அபர்னதியின் நிலைப்பாடு, அவர்களின் காதல் கெமிஸ்ட்ரிக்கு தலைப்புச் செய்தியாக அமைந்தது. ஆர்யா தனது உணர்வை வெளிப்படுத்திய உடன் இந்த காதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அலையை கிளப்பியது.
அரியர்களை க்ளியர் செய்யாமல் பொறியியல் பட்டம் கிடையாது: AICTE தகவல்
இப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபர்னதியின் கடைசி பெயர் '6ya' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஒரு வருடம் முன்பு சயீஷாவை திருமணம் செய்து கொண்ட நடிகர் ஆர்யாவை அவர் இன்னும் நேசிக்கிறாரா என்று ரசிகர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
View this post on InstagramA post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on
திருச்சி வழியாக 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அபர்னதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக உள்ளார். புதிய அப்டேட்டுகளுடன், தனது பின்தொடர்பவர்களை கவர்ந்திழுக்கிறார். இந்த இளம் நடிகை ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக 'ஜெயில்' படத்தில் அறிமுகமாகவுள்ளார். வசந்த பாலன் இயக்கியுள்ள, இந்தப் படம் சில காரணங்களால் தாமதமாகியுள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தை வெளியிட இயக்குநர் கடுமையாக முயற்சித்து வருகிறார். தயாரிப்பாளர்கள் ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதரி பாடிய 'காதோடு காதானேன்' என்ற பாடல் இசை தளங்களில் இதயங்களை வென்று வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.